இருபது கோடி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன்எஸ். ஏ. ராஜ்குமார்துள்ளாத மனமும் துள்ளும்

Irupathu Kodi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ…
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ…
இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ…
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ…

ஆண் : குழைகின்ற தங்கங்கள் கன்னங்கள் ஆகாதோ…
நெளிகின்ற வில் ரெண்டு புருவங்கள் ஆகாதோ…

குழு : நூறு கோடி பெண்கள் உண்டு…
உன் போல் யாரும் இல்லையே…
ஆனால் கன்னி உந்தன் கண்கள்…
கண்கள் மட்டும் காணவில்லையே…

ஆண் : ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ…
ஹே ஹே ஹே ஹே…

ஆண் : இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ…
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ…

—BGM—

ஆண் : தங்கமான கூந்தல் தாழ்ந்து வந்ததென்ன…
வந்து உந்தன் பாதம் கண்டு வணக்கம் சொல்லவோ…
தேன் மிதக்கும் உதடு சேர்ந்திருப்பதென்ன…
ஒன்றை ஒன்று முத்தமிட்டு இன்பம் கொள்ளவோ…

ஆண் : மானிடப் பிறவி என்னடி மதிப்பு…
உன் கால் விரல் நகமாய் இருப்பது சிறப்பு…

குழு : நூறு கோடி பெண்கள் உண்டு…
உன் போல் யாரும் இல்லையே…
ஆனால் கன்னி உந்தன் கண்கள்…
கண்கள் மட்டும் காணவில்லையே…

ஆண் : ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ…

ஆண் : இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ…
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ…

—BGM—

ஆண் : ஜூலை மாதம் பூக்கும்…
கொன்றைப் பூக்கள் போல…
சேலை கொண்ட பெண்ணின் அங்கம் தோற்றம் காட்டுதே…

ஆண் : தாஜ்மகாலின் வண்ணம் மாறக்கூடும் பெண்ணே…
மின்னும் உந்தன் கன்னம் இன்னும் வண்ணம் கூடுதே…

ஆண் : நிறமுள்ள மலர்கள் சோலைக்கு பெருமை…
நீ உள்ள ஊரில் வசிப்பது பெருமை…

குழு : நூறு கோடி பெண்கள் உண்டு…
உன் போல் யாரும் இல்லையே…
ஆனால் கன்னி உந்தன் கண்கள்…
கண்கள் மட்டும் காணவில்லையே…

ஆண் : ஓஹோ ஓஹோ ஓஹோ ஓஹோ…

ஆண் : இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ…
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண் கூசுதோ…
குழைகின்ற தங்கங்கள் கன்னங்கள் ஆகாதோ…
நெளிகின்ற வில் ரெண்டு புருவங்கள் ஆகாதோ…

குழு : நூறு கோடி பெண்கள் உண்டு…
உன் போல் யாரும் இல்லையே…
ஆனால் கன்னி உந்தன் கண்கள்…
கண்கள் மட்டும் காணவில்லையே…

—BGM—


Notes : Irupathu Kodi Song Lyrics in Tamil. This Song from Thulladha Manamum Thullum (1999). Song Lyrics penned by Vairamuthu. இருபது கோடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading