இன்னிசை பாடிவரும்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. உன்னிகிருஷ்ணன்எஸ். ஏ. ராஜ்குமார்துள்ளாத மனமும் துள்ளும்

Innisai Paadivarum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : இன்னிசை பாடிவரும்…
இளம் காற்றுக்கு உருவமில்லை…
காற்றலை இல்லையென்றால்…
ஒரு பாட்டொலி கேட்பதில்லை…

ஆண் : ஒரு கானம் வருகையில்…
உள்ளம் கொள்ளை போகுதே…
ஆனால் காற்றின் முகவரி…
கண்கள்அறிவதில்லையே…

ஆண் : இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான்…
அதை தேடித் தேடி தேடும் மனது தொலைகிறதே…

ஆண் : இன்னிசை பாடிவரும்…
இளம் காற்றுக்கு உருவமில்லை…
காற்றலை இல்லையென்றால்…
ஒரு பாட்டொலி கேட்பதில்லை…

—BGM—

ஆண் : கண் இல்லையென்றாலோ…
நிறம் பார்க்கமுடியாது…
நிறம் பார்க்கும் உன் கண்ணை…
நீ பார்க்கமுடியாது…

ஆண் : குயிலிசை போதுமே…
அட குயில் முகம் தேவையா…
உணா்வுகள் போதுமே…
அதன் உருவம் தேவையா…

ஆண் : கண்ணில் காட்சி தோன்றிவிட்டால்…
கற்பனை தீா்ந்துவிடும்…
கண்ணில் தோன்றா காட்சியில்தான்…
கற்பனை வளா்ந்துவிடும்…
அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே…

ஆண் : இன்னிசை பாடிவரும்…
இளம் காற்றுக்கு உருவமில்லை…
காற்றலை இல்லையென்றால்…
ஒரு பாட்டொலி கேட்பதில்லை…

—BGM—

ஆண் : உயிர் ஒன்று இல்லாமல்…
உடல் இங்கு நிலையாதே…
உயிர் என்ன பொருள் என்று…
அலைபாய்ந்து திரியாதே…

ஆண் : வாழ்க்கையின் வோ்களோ…
மிக ரகசியமானது…
ரகசியம் காண்பதே…
நம் அவசியமானது…

ஆண் : தேடல் உள்ள உயிர்களுக்கே…
தினமும் பசியிருக்கும்…
தேடல் என்பது உள்ளவரை…
வாழ்வில் ருசியிருக்கும்…
அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே…

ஆண் : இன்னிசை பாடிவரும்…
இளம் காற்றுக்கு உருவமில்லை…
காற்றலை இல்லையென்றால்…
ஒரு பாட்டொலி கேட்பதில்லை…

ஆண் : ஒரு கானம் வருகையில்…
உள்ளம் கொள்ளை போகுதே…
ஆனால் காற்றின் முகவரி…
கண்கள் அறிவதில்லையே…

ஆண் : இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான்…
அதை தேடித் தேடி தேடும் மனது தொலைகிறதே…

ஆண் : இன்னிசை பாடிவரும்…
இளம் காற்றுக்கு உருவமில்லை…
காற்றலை இல்லையென்றால்…
ஒரு பாட்டொலி கேட்பதில்லை…

—BGM—


Notes : Innisai Paadivarum Song Lyrics in Tamil. This Song from Thullatha Manamum Thullum (1999). Song Lyrics penned by Vairamuthu. இன்னிசை பாடிவரும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading