சொந்தம் உள்ள வாழ்க்கை

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்கருங்குயில் கணேசன்சித்து குமார்ஆனந்தம் விளையாடும் வீடு

Sonthamulla Vaazhkkai Song Lyrics in Tamil


BGM

ஆண் : சொந்தம் உள்ள வாழ்க்கை சொர்க்கத்துக்கு மேல…
சொத்து சுகம் ஏதும் வேண்டாமய்யா…
சொன்ன கதை இல்லை கேட்ட கதை இல்லை…
இந்த கதை போல வேறேதய்யா…

ஆண் : ஆயிரம் யானை பலம் அண்ணன் தம்பி சேர்ந்திருந்தா…
பாசத்தையும் ரோசத்தையும் பந்தி வைக்க முந்தும்…
புன்னகைக்கும் கண்ணீருக்கும் வேறுபாடு ஏதுமில்லை…
ஆனந்தமே வீடு முழுக்க துள்ளி விளையாடும்…

குழு (ஆண்கள்) : ஒரு ஆலமர விழுதா…
பல உறவு ஒண்ணா வாழும்…
பாக்கும் நெஞ்சம் பாசத்துல ஊஞ்சலாடுதே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு (ஆண்கள்) : ஒரு கண்ணு கலங்கினாலும்…
பல கைகள் துடைக்க வருமே…
இப்படி ஒரு கூட்டுக்குள்ளதான் வாழ ஏங்குதே…

ஆண் : சொந்தம் உள்ள வாழ்க்கை சொர்க்கத்துக்கு மேல…
சொத்து சுகம் ஏதும் வேண்டாமய்யா…
சொன்ன கதை இல்லை கேட்ட கதை இல்லை…
இந்த கதை போல வேறேதய்யா…

BGM

ஆண் : அன்னை மடி போலதான் அண்ணன் உள்ளம் தாங்குதே…
தம்பி முகம் பார்க்கையில் தந்தை முகம் தோன்றுதே…
சொந்தம் வாழும் வீட்டில்தானே தெய்வம் வந்து காவல் காக்கும்…
தேவதைகள் தேடி வந்து இந்த வீட்டில் பிறந்திடுமே…

ஆண் : ஆயிரம் யானை பலம் அண்ணன் தம்பி சேர்ந்திருந்தா…
பாசத்தையும் ரோசத்தையும் பந்தி வைக்க முந்தும்…
புன்னகைக்கும் கண்ணீருக்கும் வேறுபாடு ஏதுமில்லை…
ஆனந்தமே வீடு முழுக்க துள்ளி விளையாடும்…

குழு (ஆண்கள்) : ஒரு ஆலமர விழுதா…
பல உறவு ஒண்ணா வாழும்…
பாக்கும் நெஞ்சம் பாசத்துல ஊஞ்சலாடுதே…

ஆண் : ஒரு கண்ணு கலங்கினாலும்…
பல கைகள் துடைக்க வருமே…
இப்படி ஒரு கூட்டுக்குள்ளதான் வாழ ஏங்குதே…

ஆண் : சொந்தம் உள்ள வாழ்க்கை சொர்க்கத்துக்கு மேல…
சொத்து சுகம் ஏதும் வேண்டாமய்யா…
சொன்ன கதை இல்லை கேட்ட கதை இல்லை…
இந்த கதை போல வேறேதய்யா…


Notes : Sonthamulla Vaazhkkai Song Lyrics in Tamil. This Song from Anandham Vilayadum Veedu (2021). Song Lyrics penned by Snehan. சொந்தம் உள்ள வாழ்க்கை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading