மகமாயி சமயபுரத்தாயே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தமிழ் நம்பிL.R. ஈஸ்வரிதேவாஅம்மன் பாடல்கள்

Magamaayi Samayapura Song Lyrics in Tamil


BGM

பெண் : மகமாயி சமயபுரத்தாயே…
உன் மகளெனக்கு எல்லாமும் நியே…
மகமாயி சமயபுரத்தாயே…
உன் மகளெனக்கு எல்லாமும் நியே…

பெண் : கொள்ளிடத்தின் கரைமேலே உன் கோவில்…
தரும் குங்குமம்தான் மங்கையர்க்கு காவல்…
தரும் குங்குமம்தான் மங்கையர்க்கு காவல்…

பெண் : மகமாயி சமயபுரத்தாயே…
உன் மகளெனக்கு எல்லாமும் நியே…

BGM

பெண் : கண்கொடுக்கும் கண்ணபுர தேவி…
அருள் தருவாள் இமயமலைச் செல்வி…
கண்கொடுக்கும் கண்ணபுர தேவி…
அருள் தருவாள் இமயமலைச் செல்வி…

பெண் : மூவிலை வேல் கைகொண்ட காளி…
பகை முடிக்க வந்த எங்கள் முத்துமாரி…
மகமாயி சமயபுரத்தாயே…
உன் மகளெனக்கு எல்லாமும் நியே…

BGM

பெண் : வேப்பமரம் நிழல் கொடுக்கும் வீடு…
அது வினைதீர்க்க நீ அமைத்த கூடு…
வேப்பமரம் நிழல் கொடுக்கும் வீடு…
அது வினைதீர்க்க நீ அமைத்த கூடு…

பெண் : திருநீறே அம்மா உன் மருந்து…
அதை அணிந்தாலே நோய் ஓடும் பறந்து…

BGM

பெண் : பெற்றவளே நீ அறிவாய் என்னை…
உன் பேரருளால் வளர்ந்த இந்தப் பெண்ணை…
பெற்றவளே நீ அறிவாய் என்னை…
உன் பேரருளால் வளர்ந்த இந்தப் பெண்ணை…

பெண் : கற்றகலை சிறு துளியே எனக்கு…
அதை கடலாக்கி வைத்த புகழ் உனக்கு…

பெண் : மகமாயி சமயபுரத்தாயே…
உன் மகளெனக்கு எல்லாமும் நியே…
கொள்ளிடத்தின் கரைமேலே உன் கோவில்…
தரும் குங்குமம்தான் மங்கையர்க்கு காவல்…
தரும் குங்குமம்தான் மங்கையர்க்கு காவல்…

பெண் : மகமாயி சமயபுரத்தாயே…
உன் மகளெனக்கு எல்லாமும் நியே…


Notes : Magamaayi Samayapura Song Lyrics in Tamil. This Song from Devotional songs. Song Lyrics penned by Tamil Nambi. மகமாயி சமயபுரத்தாயே பாடல் வரிகள்.


Scroll to Top