குருமுகில்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிசாய் விக்னேஷ்விஷால் சந்திரசேகர்சீதா ராமம்

Kurumugil Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : குருமுகில்களை சிறுமுகைகளில் யார் தூவினார்…
மழைகொண்டு கவிதை தீட்டினார்…
இளம்பிறையினை இதழ் இடையினில் யார் சூட்டினார்…
சிரித்திடும் சிலையை காட்டினார்…

ஆண் : எறும்புகள் சுமந்து போகுதே சர்க்கரை பாறை ஒன்றினை…
இருதயம் சுமந்து போகுதே இனிக்கிற காதல் ஒன்றினை…
என் சின்ன நெஞ்சின் மீது இன்ப பாரமே ஏற்றி வைத்ததார்…

குழு (பெண்கள்) : குயில் மயில் குயில்கள் காணும் வெண்ணிலா…
வானோடு தீட்டி வைத்ததார்…
தரை இறங்கி வந்து ஆடுகின்றதே…
நிலாவை கூட்டி வந்ததார்…

—BGM—

ஆண் : கம்பன் சொல்ல வந்து ஆனால் கூச்சங்கொண்டு…
எழுதா ஓர் உவமை நீ…
வர்ணம் சேர்க்கும்போது வர்மன் போதை கொள்ள…
முடியா ஓவியமும் நீ…

ஆண் : எல்லோரா சிற்பங்கள் உன் மீது காதலுறும்…
உயிரே இல்லாத கல்கூட காமமுறும்…
உன் மீது காதல் கொண்ட மானுடன்தான் என்ன ஆகுவான்…

குழு (பெண்கள்) : குயில் மயில் குயில்கள் காணும் வெண்ணிலா…
வானோடு தீட்டி வைத்ததார்…
தரை இறங்கி வந்து ஆடுகின்றதே…
நிலாவை கூட்டி வந்ததார்…

—BGM—

ஆண் : உடையால் மூடி வைத்தும் இமைகள் சாத்தி வைத்தும்…
அழகால் என்னை கொல்கிறாய்…
அருவி கால்கள் கொண்டு ஓடை இடையென்றாகி…
கடலாய் நெஞ்சம் கொள்கிறாய்…

ஆண் : கடலில் மீனாக நானாக ஆணையிடு…
அலைகள் மீதேறி உன் மார்பில் நீந்தவிடு…
பேராழம் கண்டுகொள்ள ஏழு கோடி ஜென்மம் வேண்டும்…

ஆண் & குழு (பெண்கள்) : குயில் மயில் குயில்கள் காணும் வெண்ணிலா…
வானோடு தீட்டி வைத்ததார்…
தரை இறங்கி வந்து ஆடுகின்றதே…
நிலாவை கூட்டி வந்ததார்…


Notes : Kurumugil Song Lyrics in Tamil. This Song from Sita Ramam (2022). Song Lyrics penned by Madhan Karky. குருமுகில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading