பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
மதன் கார்க்கி | ஹரிசரண் எஸ் & சிந்துரி எஸ் | விஷால் சந்திரசேகர் | சீதா ராமம் |
Kannukkulle Song Lyrics in Tamil
—BGM—
பெண் : விண்ணோடு மின்னாத விண்மீன் எது…
ஆண் : அது அது உன் புன்னகை…
பெண் : ஒற்றை பூ பூக்கின்ற தேசம் எது…
ஆண் : அது அது உன் பாதுகை…
பெண் : துடிக்கும் எரிமலை எது…
ஆண் : அது என் நெஞ்சம்தானடி…
பெண் : இனிக்கிற தீ எது…
ஆண் : அது உந்தன் தீண்டலே…
பெண் : சுடுகிற பொய் எது…
ஆண் : அது உந்தன் நாணமே அன்பே…
ஆண் & பெண் : கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு…
எனது இரவை திருடுதோ…
உயிரினை வருடுதோ…
ஆண் & பெண் : கண்ணுக்குள்ளே நுழைந்த கனவு…
உனது வதனம் வரைந்ததோ…
இருதயம் நிறைந்ததோ…
—BGM—
பெண் : ஊசி கண் காணா நூலும் எது…
ஆண் : பெண்ணே உன் இடை அது…
பெண் : யாரும் கொள்ளா இன்பம் கொண்டது ஏது…
ஆண் : நீ சூடும் ஆடை அது…
பெண் : மயக்கிடும் போதையோ எது…
ஆண் : அடுத்து நீ சொல்ல போவது…
பெண் : ஆடைகளை களைந்த பிறகும்…
ஒளியை அணிவது…
ஆண் : நிலா அது…
ஆண் & பெண் : கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு…
எனது இரவை திருடுதோ…
உயிரினை வருடுதோ…
ஆண் & பெண் : கண்ணுக்குள்ளே நுழைந்த கனவு…
உனது வதனம் வரைந்ததோ…
இருதயம் நிறைந்ததோ…
—BGM—
ஆண் : கோபங்கள் இல்லா யுத்தம் எது…
பெண் : மெத்தையில் நிகழுவது…
ஆண் : மௌனம் அதை வெல்லும் ஓர் பாடல் எது…
பெண் : முத்தத்தின் ஒலி அது…
ஆண் : பதில் இல்லா கேள்வியும் எது…
பெண் : அடுத்து நீ கேட்க போவது…
ஆண் : இரு நிழல் நெருங்கும் பொழுது…
நொறுங்கும் பொருள் எது…
பெண் : ம்ம்ம்… ம்ம்ம்…
ஆண் & பெண் : கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு…
எனது இரவை திருடுதோ…
உயிரினை வருடுதோ…
ஆண் & பெண் : கண்ணுக்குள்ளே நுழைந்த கனவு…
உனது வதனம் வரைந்ததோ…
இருதயம் நிறைந்ததோ…
Notes : Kannukkulle Song Lyrics in Tamil. This Song from Sita Ramam (2022). Song Lyrics penned by Madhan Karky. கண்ணுக்குள்ளே பாடல் வரிகள்.