கண்ணே கண்ணே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிரோஷன் செபாஸ்டியன்ஜி. வி. பிரகாஷ் குமார்விசித்திரன்

Kanne Kanne Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கண்ணே கண்ணே…
உன்னை கண்டதோர் வரமே…
நெஞ்சில் வைத்தே…
கொஞ்ச எண்ணுவேன் நாளெல்லாமே…

ஆண் : சுடரி சுடரின் தொடரி…
சுகமே சொந்தம் கை நீட்டுதம்மா…
பகலே பகலின் எழிலே…
வெளிச்சம் உள்ளே பூக்குதம்மா…

ஆண் : அமுத கடலில் நானே…
விழ இதயம் குலுங்குதே…
மழையும் வெயிலும் சேர்ந்தே வர…
உயிரும் தழும்புதே…

ஆண் : சுடரி சுடரின் தொடரி…
சுகமே சொந்தம் கை நீட்டுதம்மா…
பகலே பகலின் எழிலே…
வெளிச்சம் உள்ளே பூக்குதம்மா…

—BGM—

ஆண் : பால் நிலவே நேரம் பார்த்து…
கீழ் வருமோ சாதம் ஊட்ட…
ஏழ் இசையும் கைகள் கோர்த்து…
பாடிடுமோ தூளி ஆட்ட…

ஆண் : கடவுள் கொடுத்த புதையலே…
குழந்தை வடிவில் கிடைத்ததோ…
மனதில் விரிந்த மகிழம் பூ…
எதிரில் சிரித்ததோ…

ஆண் : சுடரி சுடரின் தொடரி…
சுகமே சொந்தம் கை நீட்டுதம்மா…
பகலே பகலின் எழிலே…
வெளிச்சம் உள்ளே பூக்குதம்மா…

—BGM—

ஆண் : தேன் மழை போல் பேசும் பேச்சை…
நாள் முழுதும் கேட்டால் போதும்…
பூ விழிகள் காட்டும் காட்சி…
நீர் மதகை மோதும் கோலம்…

ஆண் : அருவி வழியும் அழகு மேல்…
உனது சிரிப்பில் சிதறுதே…
சிணுங்கும் உனது குரலிலே…
உலகம் விடியுதே…

ஆண் : கண்ணே கண்ணே…
உன்னை கண்டதோர் வரமே…
நெஞ்சில் வைத்தே…
கொஞ்ச எண்ணுவேன் நாளெல்லாமே…

ஆண் : சுடரி சுடரின் தொடரி…
சுகமே சொந்தம் கை நீட்டுதம்மா…
பகலே பகலின் எழிலே…
வெளிச்சம் உள்ளே பூக்குதம்மா…

—BGM—


Notes : Kanne Kanne Song Lyrics in Tamil. This Song from Visithiran (2022). Song Lyrics penned by Yugabharathi. கண்ணே கண்ணே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading