Kumudam Pol Song Lyrics in Tamil

குமுதம் போல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தவசிமணிஹரிஹரன்சிற்பிமூவேந்தர்

Kumudam Pol Song Lyrics in Tamil


BGM

ஆண் : குமுதம் போல் வந்தக் குமரியே…
முகம் குங்குமமாய் சிவந்ததென்னவோ…
மனம் வண்ணத்திரைக் கனவுக் கண்டதோ…

ஆண் : குமுதம் போல் வந்தக் குமரியே…
முகம் குங்குமமாய் சிவந்ததென்னவோ…
மனம் வண்ணத்திரைக் கனவுக் கண்டதோ…

BGM

ஆண் : நீ பேசும் நேரத்தில் கல்கண்டு கசக்கும்…
உன் நிழல் கண்ட போதும் அடி தினகரனும் குளிரும்…
நீ பேசும் நேரத்தில் கல்கண்டு கசக்கும்…
உன் நிழல் கண்ட போதும் அடி தினகரனும் குளிரும்…

ஆண் : இதயத்தின் உயிரோட்டமே…
இன்ப உதயத்தின் ஒளிக் கூட்டமே…
இதயத்தின் உயிரோட்டமே…
இன்ப உதயத்தின் ஒளிக் கூட்டமே…

ஆண் : என் மன வீட்டின் ஒரு சாவி நீதானே…
முத்தாரமே… மணி முத்தாரமே…

ஆண் : குமுதம் போல் வந்தக் குமரியே…
முகம் குங்குமமாய் சிவந்ததென்னவோ…
மனம் வண்ணத்திரைக் கனவுக் கண்டதோ…

BGM

ஆண் : பண்பாடும் உன் கண்கள் பொன் மாலை முரசு…
மின்னும் தினமலர் போல் நீ எனை மெல்ல உரசு…
பண்பாடும் உன் கண்கள் பொன் மாலை முரசு…
மின்னும் தினமலர் போல் நீ எனை மெல்ல உரசு…

ஆண் : தினம் தந்தி அடிக்கிறதே…
தினம் தந்தி அடிக்கிறதே…
மூச்சு தீயாக கொதிக்கின்றதே…

ஆண் : உள்ளம் தினம் தந்தி அடிக்கின்றதே…
மூச்சு தீயாக கொதிக்கின்றதே…

ஆண் : நெஞ்சில் மணமாலை மலரே…
உன் நினைவென்னும்…
மணி ஓசையே… தினம் மணி ஓசையே…

ஆண் : குமுதம் போல் வந்த குமரியே…
முகம் குங்குமமாய் சிவந்ததென்னவோ…
மனம் வண்ணத்திரைக் கனவுக் கண்டதோ…

BGM

ஆண் : ரதி என்னும் அழகிக்கும் நீதானே ராணி…
கதி நீயே எனைக் கொஞ்சம் கண் பாரு தேவி…
ரதி என்னும் அழகிக்கும் நீதானே ராணி…
கதி நீயே எனைக் கொஞ்சம் கண் பாரு தேவி…

ஆண் : ஆனந்த விகடம் சொல்லு…
என்னைப் பேரின்ப நதியில் தள்ளு…
ஆனந்த விகடம் சொல்லு…
என்னைப் பேரின்ப நதியில் தள்ளு…

ஆண் : நான் பாக்யாதிபதி ஆனேன்…
உன்னாலே கண்ணே உஷா…
பசும் பொன்னே உஷா…

ஆண் : குமுதம் போல் வந்தக் குமரியே…
முகம் குங்குமமாய் சிவந்ததென்னவோ…
மனம் வண்ணத்திரைக் கனவுக் கண்டதோ…

ஆண் : குமுதம் போல் வந்தக் குமரியே…
முகம் குங்குமமாய் சிவந்ததென்னவோ…
மனம் வண்ணத்திரைக் கனவுக் கண்டதோ…


Notes : Kumudam Pol Song Lyrics in Tamil. This Song from Moovendar (1998). Song Lyrics penned by Thavasimani. குமுதம் போல் பாடல் வரிகள்.