மாமா மாமா மாமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏ. மருதகாசிடி.எம். சௌந்தரராஜன் & கே. ஜமுனா ராணிகே.வி. மகாதேவன்குமுதம்

Mama Mama Mama Song Lyrics in Tamil


—BGM—

பெண் : மாமா மாமா மாமா…
மாமா மாமா மாமா…

ஆண் : ஏம்மா ஏம்மா ஏம்மா…
ஏம்மா ஏம்மா ஏம்மா…

பெண் : சிட்டுப் போலப் பெண்ணிருந்தா…
வட்டமிட்டு சுத்தி சுத்தி…
கிட்டக் கிட்ட ஓடி வந்து தொடலாமா…

குழு : சிட்டுப் போலப் பெண்ணிருந்தா…
வட்டமிட்டு சுத்தி சுத்தி…
கிட்டக் கிட்ட ஓடி வந்து தொடலாமா…

பெண் : தாலி கட்டுமுன்னே…
கை மேல படலாமா…
மாமா மாமா மாமா…

குழு : மாமா மாமா மாமா…

ஆண் : வெட்டும் விழிப் பார்வையினால்…
ஒட்டுறவாய்ப் பேசிவிட்டு…
எட்டி எட்டி இப்படியும் ஒடலாமா…

குழு : வெட்டும் விழிப் பார்வையினால்…
ஒட்டுறவாய்ப் பேசிவிட்டு…
எட்டி எட்டி இப்படியும் ஒடலாமா…

ஆண் : கையைத் தொட்டுப் பேச மட்டும்…
தடை போடலாமா…
ஏம்மா ஏம்மா ஏம்மா…

குழு : ஏம்மா ஏம்மா ஏம்மா…

—BGM—

பெண் : ஊரறிய நாடறிய பந்தலிலே…
நமக்கு உத்தவங்க மத்தவங்க மத்தியிலே…

குழு : ஊரறிய நாடறிய பந்தலிலே…
நமக்கு உத்தவங்க மத்தவங்க மத்தியிலே…

பெண் : ஒண்ணாகி…
ஆண் : ஆஹா…

பெண் : ஒண்ணாகி உறவு முறை…
கொண்டாடும் முன்னாலே…
ஒருவர் கையை மற்றொருவர் பிடிக்கலாமா…
இதை உணராமல் ஆம்பளைங்க துடிக்கலாமா…
மாமா மாமா மாமா… குழு : மாமா மாமா மாமா…

—BGM—

குழு : ஹோய் ஹோய் ஹோய்…

—BGM—

குழு : ஹோய் ஹோய் ஹோய்…

—BGM—

ஆண் : நாடறிய ஒண்ணாகும் முன்னாலே…
தூண்டி போடுகின்ற உங்களது கண்ணாலே…

குழு : நாடறிய ஒண்ணாகும் முன்னாலே…
தூண்டி போடுகின்ற உங்களது கண்ணாலே…

ஆண் : ஜாடை காட்டி…
பெண் : ஆஹா…

ஆண் : ஆசை மூட்டி…
பெண் : ஓஹோ…

ஆண் : ஜாடை காட்டி ஆசை மூட்டி…
சல்லாபப் பாட்டுப் பாடி…
நீங்க மட்டும் எங்களைத் தாக்கலாமா…
உள்ள நிலை தெரிஞ்சும் இந்தக் கேள்வி கேட்கலாமா…
ஏம்மா ஏம்மா ஏம்மா…

குழு : ஏம்மா ஏம்மா ஏம்மா…

—BGM—

பெண் : கன்னிப் பொண்ணப் பாத்தவுடன் காதலிச்சு…
அவளைக் கைவிட்டு ஒம்பது மேல் ஆசை வச்சு…

குழு : கன்னிப் பொண்ணப் பாத்தவுடன் காதலிச்சு…
அவளைக் கைவிட்டு ஒம்பது மேல் ஆசை வச்சு…

பெண் : வண்டாக…
ஆண் : ஆஹா…

பெண் : வண்டாக மாறுகிற மனமுள்ள ஆம்பளைங்க…
கொண்டாட்டம் போடுவதப் பார்த்ததில்லையா…
பெண்கள் திண்டாடும் கதைகளைக் கேட்டதில்லையா…
மாமா மாமா மாமா…

குழு : மாமா மாமா மாமா…

—BGM—

குழு : ஹோய் ஹோய் ஹோய்…

—BGM—

குழு : ஹோய் ஹோய் ஹோய்…

—BGM—

ஆண் : ஒண்ண விட்டு ஒண்ணத் தேடி ஓடுறவன்…
தினமும் ஊரை ஏச்சு…
வேஷமெல்லாம் போடுறவன்…

குழு : ஒண்ண விட்டு ஒண்ணத் தேடி ஓடுறவன்…
தினமும் ஊரை ஏச்சு…
வேஷமெல்லாம் போடுறவன்…

ஆண் : உள்ள இந்த ஒலகத்தையே…
உத்துப் பாத்தா நீங்க இப்போ…
சொல்லுவது எல்லாமே உண்மைதான்…
பெண் : ஹா…

ஆண் : கொஞ்சும் தூர நின்னு பழகுவதும்…
நன்மை தான் நன்மை தான்…
ஆமா ஆமா ஆமா…
குழு : ஆமா ஆமா ஆமா…

பெண் : கட்டுப்பாட்ட மீறாமே…
சட்டதிட்டம் மாறமே…
காத்திருக்க வேணும்…
கொஞ்ச காலம் வரையில்…

ஆண் : ஓஹோ…

குழு : கட்டுப்பாட்ட மீறாமே…
சட்டதிட்டம் மாறமே…
காத்திருக்க வேணும்…
கொஞ்ச காலம் வரையில்…

பெண் : பிறகு கல்யாணம் ஆகிவிட்டால்…
ஏது தடை ஏது தடை…
மாமா மாமா மாமா…
ஆண் : ஆமா…

குழு : மாமா மாமா மாமா…
குழு : ஆமா ஆமா ஆமா…
ஆண் : போடு…
குழு : ஆமா ஆமா ஆமா…

—BGM—


Notes : Mama Mama Mama Song Lyrics in Tamil. This Song from Kumudham (1961). Song Lyrics penned by A. Maruthakasi. மாமா மாமா மாமா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading