மூக்குத்தி முத்தழகு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
எஸ். ஏ. ராஜ்குமார்ஹரிஹரன்எஸ். ஏ. ராஜ்குமார்கண்ணுபடபோகுதய்யா

Mookuthi Muthazhaghu Song Lyrics in Tamil


ஆண் : மூக்குத்தி முத்தழகு…
மூணாம்பிறை பொட்டழகு…
பொள்ளாச்சி மண்ணில் விளைஞ்ச…
நெல்லுமணி பல்லழகு…

—BGM—

ஆண் : மூக்குத்தி முத்தழகு…
மூணாம்பிறை பொட்டழகு…
குழு : பொட்டழகு… பொட்டழகு…

ஆண் : பொள்ளாச்சி மண்ணில் விளைஞ்ச…
நெல்லுமணி பல்லழகு…
குழு : பல்லழகு… பல்லழகு…

ஆண் : பத்து விரல் பூவழகு…
பாதம் தங்க தேரழகு…
பத்து விரல் பூவழகு…
பாதம் தங்க தேரழகு…

ஆண் : வானம் விட்டு மண்ணில் வந்த…
நிலவல்ல பெண்ணழகு…

ஆண் : மூக்குத்தி முத்தழகு…
மூணாம்பிறை பொட்டழகு…
குழு : பொட்டழகு… பொட்டழகு…

ஆண் : பொள்ளாச்சி மண்ணில் விளைஞ்ச…
நெல்லுமணி பல்லழகு…
குழு : பல்லழகு… பல்லழகு…

—BGM—

ஆண் : மருதாணி கொடி போல…
மவுசாக அவ நடப்பா…
குழு : ஆஹா என்ன நடையோ…
ஆஹா அன்ன நடையோ…

ஆண் : மழை பெஞ்ச தரை போல…
பதமாக தானிருப்பா…
குழு : ஆஹா என்ன அழகோ…
ஆஹா வண்ண மயிலோ…

ஆண் : வலை வீசும் கண்ணழகு…
வளைந்தாடும் இடையழகு…
கருநாகக் குழல் அழகு…
கற்கண்டு குரல் அழகு…

ஆண் : மலையாள மலையில் மலர்ந்த…
மலர்க்காடு முள்ளழகு…

ஆண் : மூக்குத்தி முத்தழகு…
மூணாம்பிறை பொட்டழகு…
குழு : பொட்டழகு… பொட்டழகு…

ஆண் : பொள்ளாச்சி மண்ணில் விளைஞ்ச…
நெல்லுமணி பல்லழகு…
குழு : பல்லழகு… பல்லழகு…

—BGM—

ஆண் : கொண்டவனே கோயில் எனும்…
குலமகளா அவள் இருப்பா…
குழு : ஆஹா நல்ல மனசு…
ஆஹா தங்க மனசு…

ஆண் : தன் முகத்தெப் பார்ப்பதற்கும்…
என் முகத்தில் அவள் முழிப்பாள்…
குழு : ஆஹா ரொம்ப புதுசு…
அய்யாக்கேத்த பரிசு…

ஆண் : கார்த்திகையில் வெயில் தருவா…
சித்திரையில் மழை தருவா…
விண்மீன்கள் சேர்த்து வைத்து…
வீட்டில் விளக்கேற்றி வைப்பாள்…

ஆண் : தாயைப்போல பாசம் சொல்லி…
தமிழ்பெண்ணாய் வாழ்ந்திருப்பாள்…

ஆண் : மூக்குத்தி முத்தழகு…
மூணாம்பிறை பொட்டழகு…
குழு : பொட்டழகு… பொட்டழகு…

ஆண் : பொள்ளாச்சி மண்ணில் விளைஞ்ச…
நெல்லுமணி பல்லழகு…
குழு : பல்லழகு… பல்லழகு…

ஆண் : பத்து விரல் பூவழகு…
பாதம் தங்க தேரழகு…
பத்து விரல் பூவழகு…
பாதம் தங்க தேரழகு…

ஆண் : வானம் விட்டு மண்ணில் வந்த…
நிலவல்ல பெண்ணழகு…

ஆண் : மூக்குத்தி முத்தழகு…
மூணாம்பிறை பொட்டழகு…
குழு : பொட்டழகு… பொட்டழகு…

ஆண் : பொள்ளாச்சி மண்ணில் விளைஞ்ச…
நெல்லுமணி பல்லழகு…
குழு : பல்லழகு… பல்லழகு…

—BGM—


Notes : Mookuthi Muthazhaghu Song Lyrics in Tamil. This Song from Kannupada Poguthaiya (1999). Song Lyrics penned by S. A. Rajkumar. மூக்குத்தி முத்தழகு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading