தோம் கருவில் இருந்தோம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷங்கர் மகாதேவன்ஏ.ஆர்.ரகுமான்ஸ்டார்

Thom Karuvil Irunthom Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தோம் கருவில் இருந்தோம்…
கவலை இன்றி கண்மூடி கிடந்தோம்…
தோம் தரையில் விழுந்தோம்…
விழுந்துவுடன் கண் தூக்கம் தொலைத்தோம்…

ஆண் : அப்போது அப்போது போன தூக்கம்…
நம் கண்களிலே…
எப்போது எப்போது வந்து சேரும்…
விடை தோணலையே…

—BGM—

ஆண் : தோம் கருவில் இருந்தோம்…
கவலை இன்றி கண்மூடி கிடந்தோம்…
தோம் தரையில் விழுந்தோம்…
விழுந்துவுடன் கண் தூக்கம் தொலைத்தோம்…

ஆண் : தோம் கருவில் இருந்தோம்…
கவலை இன்றி கண்மூடி கிடந்தோம்…

ஆண் : அப்போது அப்போது போன தூக்கம்…
நம் கண்களிலே…
எப்போது எப்போது வந்து சேரும்…
விடை தோணலையே… ஏஏ…

ஆண் : தண்ணீரில் வாழ்கின்றேன்…
நாம் கூட மச்சாவதாரம்தான்…

ஆண் : தோம் கருவில் இருந்தோம்…
கவலை இன்றி கண்மூடி கிடந்தோம்…

—BGM—

ஆண் : அலைகளை அலைகளை பிடித்து கொண்டு…
கரைகளை அடைந்தவர் யாருமில்லை…
தனிமையில் தனிமையில் தவித்து கொண்டு…
சௌக்கியம் அடைவது ஞாயமில்லை…

ஆண் : கவலைக்கு மருந்து இந்த ராஜா தவம்…
கண்ணீர் கூட போதையின் மறு வடிவம்…
வழி எது வாழ்கை எது விளங்கவில்லை…
வட்டத்துக்கு தொடக்கமும் முடிவுமில்லை…

ஆண் : கையில் கோப்பை இல்லை என்றால்…
கற்பனை வரைவது நின்று விடும்…
கனவுகள் மட்டும் இல்லை என்றால்…
கவலைகள் நம் உடல் தின்று விடும்…

ஆண் : தோம் கருவில் இருந்தோம்…
கவலை இன்றி கண்மூடி கிடந்தோம்…
தோம் தரையில் விழுந்தோம்…
விழுந்துவுடன் கண் தூக்கம் தொலைத்தோம்…

ஆண் : அப்போது அப்போது போன தூக்கம்…
நம் கண்களிலே…
எப்போது எப்போது வந்து சேரும்…
விடை தோணலையே…

—BGM—

ஆண் : ஜனனம் என்பது ஒரு கரைதான்…
மரணம் என்பது மறு கரைதான்…
இரண்டுக்கும் நடுவே ஓடுவது…
தலைவிதி என்னும் ஒரு நதிதான்…

ஆண் : வாழ்கையின் பிடிமானம் ஏதுமில்லை…
இந்த கிண்ணம்தானே பிடிமானம் வேரு இல்லை…
திராட்ஷை தின்பவன் புத்திசாலியா…
பழரசம் குடிப்பவன் குற்றவாளியா…

ஆண் : பெண்ணுக்குள் தொடங்கும் வாழ்க்கை இது…
ஆஆஆ… ஆஅ… ஆஅ…
மண்ணுக்குள் முடிகிறதே…
ஆஆஆ… ஆஅ… ஆஅ…

ஆண் : விஷயம் தெரிந்தும் மனித இனம்…
ஆஆஆ… ஆஅ… ஆஅ…
விண்ணுக்கும் மண்ணுக்கும் பறக்கிறதே…
ஆஆஆ… ஆஅ… ஆஅ…

ஆண் : தோம் கருவில் இருந்தோம்…
கவலை இன்றி கண்மூடி கிடந்தோம்…
தோம் தரையில் விழுந்தோம்…
விழுந்துவுடன் கண் தூக்கம் தொலைத்தோம்…

ஆண் : அப்போது அப்போது போன தூக்கம்…
நம் கண்களிலே…
எப்போது எப்போது வந்து சேரும்…
விடை தோணலையே… ஏஏ…

—BGM—


Notes : Thom Karuvil Irunthom Song Lyrics in Tamil. This Song from Star (2001). Song Lyrics penned by Vairamuthu. தோம் கருவில் இருந்தோம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading