ஆகாய பந்தலிலே 

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன் & பி. சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன்பொன்னூஞ்சல்

Aagaya Pandhalile Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஆகாயப் பந்தலிலே…
பொன்னூஞ்சல் ஆடுதம்மா…

—BGM—

ஆண் : ஆகாயப் பந்தலிலே…
பொன்னூஞ்சல் ஆடுதம்மா…
ஊர்கோலம் போவோமா…
உள்ளம் அங்கே ஓடுதம்மா…

பெண் : ஊர்கோலம் போவோமா…
உள்ளம் அங்கே ஓடுதம்மா…
ஆகாயப் பந்தலிலே…
பொன்னூஞ்சல் ஆடுதம்மா…

—BGM—

பெண் : பூச்சூடி புதுப்பட்டு நான் சூடி…
மணச் சங்கு கையேந்தி…
நாம் அங்கே போவோமா…

பெண் : பூச்சூடி புதுப்பட்டு நான் சூடி…
மணச் சங்கு கையேந்தி…
நாம் அங்கே போவோமா…

பெண் : மீனாளின் குங்குமத்தை…
மீனாளின் குங்குமத்தை…
நானாள வேண்டுமம்மா…
மானோடு நீராட…
மஞ்சள் கொண்டு செல்வோமா…

பெண் : ஆகாயப் பந்தலிலே…
பொன்னூஞ்சல் ஆடுதம்மா…
ஊர்கோலம் போவோமா…
உள்ளம் அங்கே ஓடுதம்மா…

—BGM—

ஆண் : பால் வண்ணம்…
பழத்தட்டு பூக்கிண்ணம்…
மணப்பெண்ணின் தாய் தந்த…
சீராக காண்போமா…

—BGM—

ஆண் : பால் வண்ணம்…
பழத்தட்டு பூக்கிண்ணம்…
மணப்பெண்ணின் தாய் தந்த…
சீராக காண்போமா…

ஆண் : ஊராரின் சன்னதியில்…
ஒன்றாக வேண்டுமம்மா…
தாயென்றும் சேயென்றும்…
தந்தையென்றும் ஆவோமா…

ஆண் : ஆகாயப் பந்தலிலே…
பொன்னூஞ்சல் ஆடுதம்மா…

—BGM—

பெண் : கண்ணென்றும்…
வளை கொண்ட கை என்றும்
இதழ் கொண்ட அங்கங்கள்…
நீ வாழும் இல்லங்கள்…

ஆண் : பொன்மாலை அந்தியிலே…
என் மாலை தேடி வரும்…
அம்மா உன் பெண்ணுள்ளம்…
நாணம் சொல்லி ஆடி வரும்…

ஆண் & பெண் : ஆகாயப் பந்தலிலே…
பொன்னூஞ்சல் ஆடுதம்மா…
ஊர்கோலம் போவோமா…
உள்ளம் அங்கே ஓடுதம்மா…

—BGM—


Notes : Aagaya Pandhalile Song Lyrics in Tamil. This Song from Ponnunjal (1973). Song Lyrics penned by Kannadasan. ஆகாய பந்தலிலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading