கும்மியடி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மகாகவி சுப்பிரமணிய பாரதியார்சுகந்தி & அமிர்தவர்ஷினிஜிப்ரான்திங்க் மியூசிக் இந்தியா

Kummiyadi Song Lyrics in Tamil

—BGM—

பெண் : தந்தன தந்தானே தன தானா தந்தானே…
தந்தன தந்தானே தன தானா தந்தானே…
தந்தன தந்தானே தன தானா தந்தானே…
தந்தன தந்தானே தன தானா தந்தானே…

பெண் : கும்மியடி தமிழ்நாடு முழுவுதும் குலுங்கிட கைகொட்டி கும்மியடி…
நம்மை பிடித்த பிசாசுகள் போயின நன்மை கண்டோமென்று கும்மியடி…
கும்மியடி தமிழ்நாடு முழுவுதும் குலுங்கிட கைகொட்டி கும்மியடி…
நம்மை பிடித்த பிசாசுகள் போயின நன்மை கண்டோமென்று கும்மியடி…

பெண் : ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்றெண்ணி இருந்தவர் மாய்ந்துவிட்டார்…
வீட்டுக்குள்ளேயே பெண்ணை பூட்டி வைப்போமென்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்…
ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்றெண்ணி இருந்தவர் மாய்ந்துவிட்டார்…
வீட்டுக்குள்ளேயே பெண்ணை பூட்டி வைப்போமென்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்…

—BGM—

பெண் : வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும் வேண்டி வந்தோமென்று கும்மியடி…
சாதம் படைக்கவும் செய்திடுவோம் தெய்வ சாதி படைக்கவும் செய்திடுவோம்…
வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும் வேண்டி வந்தோமென்று கும்மியடி…
சாதம் படைக்கவும் செய்திடுவோம் தெய்வ சாதி படைக்கவும் செய்திடுவோம்…

பெண் : நல்ல விலை கொண்டு நாயை விற்பார் அந்த நாயிடம் யோசனை கேட்பந்துண்டோ…
கொல்ல துணிவின்றி நம்மையும் அந்நிலை கூட்டி வைத்தார் பழி கூட்டிவிட்டார்…
நல்ல விலை கொண்டு நாயை விற்பார் அந்த நாயிடம் யோசனை கேட்பந்துண்டோ…
கொல்ல துணிவின்றி நம்மையும் அந்நிலை கூட்டி வைத்தார் பழி கூட்டிவிட்டார்…

பெண் : தந்தன தந்தானே…
தன தானா தந்தானே…
தந்தன தந்தானே…
தன தானா தந்தானே…

—BGM—

பெண் : பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்…
எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி…
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்…
எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி…

பெண் : தந்தானே தந்தானே தந்தானே தந்தானே…
தந்தானே தந்தானே தந்தானே…
தந்தானே தந்தானே தந்தானே தந்தானே…
தந்தானே தந்தானே தந்தானே…

பெண் : தந்தானே தந்தானே தந்தானே…
தந்தானே தந்தானே தந்தானே…
தந்தானே தந்தானே தந்தானே…

Notes : Kummiyadi Song Lyrics in Tamil. This Song from Think Music India (2021). Song Lyrics penned by Mahakavi Subramanya Bharathiyar. கும்மியடி பாடல் வரிகள்.

Scroll to Top