கொண்டைமுடி அலங்கரித்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கே. சோமுபி. சுசீலாசோமு & கஜாஅம்மன் பாடல்கள்

Kondalmudi Alankariththu Song Lyrics in Tamil


பெண் : கனியமுதே கருணைக் கடலே…
துணை நீயே… சுந்தரேசர் மகிழும் மயிலே…
கதம்ப வனக்குயிலே…
மாதவர் போற்றும் எழிலே…
பதமலர் தனை பணிந்தோமே…
அங்கயர்க்கன்னியே…

BGM

பெண் : கொண்டைமுடி அலங்கரித்து…
கொஞ்சும் கிளி கையில் வைத்து…
கொண்டைமுடி அலங்கரித்து…
கொஞ்சும் கிளி கையில் வைத்து…
அஞ்சுக மொழி உமையாள் வீற்றிருந்தாள்…
அந்த அழகிய மாநகர் மதுரையிலே…
மதுரையிலே… மதுரையிலே… மதுரையிலே…

BGM

பெண் : வான்மதி சூடிய கணவர் சொக்கேசருடன்…
மாணிக்க தேரினில் மரகதப்பாவை வந்தாள்…
வான்மதி சூடிய கணவர் சொக்கேசருடன்…
வைரமுடி மின்னிட மரகத பாவை வந்தாள்…

பெண் : வானவர் பூமாரி பொழிந்திடவே…
சிவ கானமும் ஒலித்திட தேவி வந்தாள்…
மீனாட்சி வந்தாள்…
அந்த அழகிய மாநகர் மதுரையிலே…

BGM

பெண் : தேனமர் சோலையாம் கதம்பவனம்…
அங்கு வானளாவும் தங்க கோபுரம் எங்கும் காணும்…
தேன்தமிழ் பாவலரின் தேனான கானம்…
தேன்தமிழ் பாவலரின் தேனான கானம்…

பெண் : ஆனந்த வெள்ளம் பெருகும் மீனாக்ஷி சன்னிதானம்…
ஆனந்த வெள்ளம் பெருகும் மீனாக்ஷி சன்னிதானம்…
அந்த அழகிய மாநகர் மதுரையிலே…
மதுரையிலே… மதுரையிலே… மதுரையிலே…


Notes : Kondalmudi Alankariththu Song Lyrics in Tamil. This Song from Devotional songs. Song Lyrics penned by K. Somu. கொண்டைமுடி அலங்கரித்து பாடல் வரிகள்.


Scroll to Top