கத்தி வைத்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிசுக்விந்தர் சிங் & ரஞ்சனிகீதபிரியன்மன்னவரு சின்னவரு

Kathi Vaitha Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கத்தி வைத்து கண்கள் ரெண்டும் யுத்தம் செய்யுதே…
அது எப்படி… அது எப்படி… அது எப்படி…

பெண் : முத்தமென்னும் ஈரத் தீயில் இதயம் வெந்ததே…
அது அப்படி… அது அப்படி… அது அப்படி…

ஆண் : பௌர்ணமி உன்னை தொட்டதும் என் கை…
வானமெங்கும் காதல் கொண்டு விண்மீன் தீண்டுதே…

பெண் : அது எப்படி… அது எப்படி… அது எப்படி…

ஆண் : கத்தி வைத்து கண்கள் ரெண்டும் யுத்தம் செய்யுதே…
அது எப்படி… அது எப்படி… அது எப்படி…

—BGM—

ஆண் : சிக்கி முக்கி கல்லை போலே…
தீப்பிடிக்கும் முத்தத்தாலே…
அணைப்பது குற்றம் என்று சொல்வாயா…

—BGM—

பெண் : ம்ம்ம்… முத்தம் முட்டும் முத்தத்தாலே…
மூச்சு முட்டும் வெக்கத்தாலே…
மழையினில் ஆடை நெய்து அணிவேனா…

ஆண் : ஹே… கொட்டும் அருவி தொட்டு தழுவ…
வெட்கப்படுவாயா…

பெண் : என்னை மோக கடலில் நீச்சல் பழக…
தள்ளி விடுவாயா…

ஆண் : ஹோ… இதுதான் மன்மத வெள்ளம்…
படகு போலே மிதக்க பழகடி… ஹோய்…

பெண் : அது எப்படி… அது எப்படி… அது எப்படி…

ஆண் : ஹோ… கத்தி வைத்து கண்கள் ரெண்டும் யுத்தம் செய்யுதே…
அது எப்படி… அது எப்படி… அது எப்படி…

—BGM—

பெண் : மூச்சி ரெண்டை மோத சொல்லி…
வெப்ப நிலை மாற சொல்லி…
பூவுக்குள்ளும் மின்சாரம் பிழிந்தாயே…

ஆண் : கண்ணிரெண்டை மூடச் சொல்லி…
மீசை குத்தும் பாடம் சொல்லி…
ஆறடியை ஈரடியாய் வெல்வேனே…

பெண் : ஹேய்… வெட்ட வெளியில் கொட்டும் நிலவில்…
தாஜ்மஹால் நானா…

ஆண் : என் மும்தாஜ் நீயே ஷாஜஹான் நானே…
தாஜ்மஹால் நீனே…

பெண் : நிலவுக்கு சேலை தந்து…
குளிரை மறந்து தூங்க சொல்வோம்…

ஆண் : அது எப்படி… அது எப்படி… அது எப்படி…

ஆண் : ஓஒஹோ… கத்தி வைத்து கண்கள் ரெண்டும் யுத்தம் செய்யுதே…
அது எப்படி… அது எப்படி… அது எப்படி…

பெண் : பௌர்ணமி என்னை தொட்டதும் உன் கை…
வானமெங்கும் காதல் கொண்டு விண்மீன் தீண்டுதே…

ஆண் : அது எப்படி… அது எப்படி… அது எப்படி…
ஆண் & பெண் : அது இப்படி… அது இப்படி… அது இப்படி…


Notes : Kathi Vaitha Song Lyrics in Tamil. This Song from Mannavaru Chinnavaru (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. கத்தி வைத்து பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading