karupputhan-enakku-pidicha-colouru-song-lyrics-in-tamil

கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா.விஜய்அனுராதா ஸ்ரீராம்தேவாவெற்றிக் கொடி கட்டு

Karupputhan Enakku Pidicha Colouru Song Lyrics in Tamil


பெண் : கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு…
அவன் கண்ணு ரெண்டும் என்ன மயக்கும்…
தவுசண்ட் வாட்சு பவரு…

பெண் : கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு…

BGM

பெண் : கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு…
கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு…
அவன் கண்ணு ரெண்டும் என்ன மயக்கும்…
தவுசண்ட் வாட்சு பவரு…

பெண் : கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு…

பெண் : சாமி கருப்புதான்…
சாமி சிலையும் கருப்புதான்…
யானை கருப்புதான்…
கூவும் குயிலும் கருப்புதான்…

பெண் : என்ன ஆச பட்டு கொஞ்சும் போது…
குத்துற மீசை கருப்புதான்…
அசத்தும் கருப்புதான்…

பெண் : கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு…
அவன் கண்ணு ரெண்டும் என்ன மயக்கும்…
தவுசண்ட் வாட்சு பவரு…

பெண் : கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு…

—BGM—

பெண் : வெண்ணிலவை உலகம் பார்க்க…
வச்ச இரவு கருப்புதான்…
வேர்வை சிந்தி உழைக்கும் இந்த…
விவசாயி கருப்புதான்…

பெண் : மண்ணுக்குள்ள இருக்குறப்போ…
வைரம் கூட கருப்புதான்…
மதுரை வீரன் கையில் இருக்கும்…
வீச்சருவா கருப்புதான்…

பெண் : பூமியில முதல் முதலா…
பொறந்த மனுஷன் கருப்புதான்…
மக்கள் பஞ்சம் தீர்க்கும் அந்த…
மழை மேகம் கருப்புதான்…

பெண் : உன்ன என்ன ரசிக்க வச்ச…
உன்ன என்ன ரசிக்க வச்ச…
கண்ணு முழி கருப்புதான்…
கற்பு சொல்லி தந்த அந்த…
கண்ணகியும் கருப்புதான்…

பெண் : தாய் வயிற்றில் நாம் இருந்த…
தாய் வயிற்றில் நாம் இருந்த…
கருவறையும் கருப்புதான்…
வணக்கம் கருப்புதான்…

பெண் : கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு…
அவன் கண்ணு ரெண்டும் என்ன மயக்கும்…
தவுசண்ட் வாட்சு பவரு…

பெண் : கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு…

BGM

பெண் : உன்ன கண்ட நாள் முதலா…
வச்ச பொட்டும் கருப்புதான்…

பெண் : ரெட்டை ஜடை பின்னல…
கட்டும் ரிப்பன் கருப்புதான்…
பூக்கடையில் தேடினேன்…
பூவில் இல்லை கருப்புதான்…

பெண் : அன்று முதல் எனக்குதான்…
பூக்கள் மீது வெறுப்புதான்…
பாவாடை கட்டி கட்டி…
பதிஞ்ச தடம் கருப்புதான்…

பெண் : முத்தம் கேட்டு காத்திருக்கும்…
அந்த இடம் உனக்குதான்…

பெண் : உன்ன பொத்தி வச்சிருக்கும்…

BGM

பெண் : உன்ன பொத்தி வச்சிருக்கும்…
நெஞ்சு குழி கருப்புதான்…
ஊர் அறிய பெத்துக்கணும்…
புள்ள பத்து கருப்புதான்…

பெண் : நம்மூரு சூப்பர் ஸ்டாரு…
ஹான்… நம்மூரு சூப்பர் ஸ்டாரு…
ரஜினிகாந்தும் கருப்பு தான்…
அழகு கருப்புதான்…

பெண் : கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு…
அவன் கண்ணு ரெண்டும் என்ன மயக்கும்…
தவுசண்ட் வாட்சு பவரு…

பெண் : கருப்புதான் எனக்கு புடிச்ச கலரு…

பெண் : சாமி கருப்புதான்…
சாமி சிலையும் கருப்பு தான்…
யானை கருப்புதான்…
கூவும் குயிலும் கருப்புதான்…

பெண் : என்ன ஆச பட்டு கொஞ்சும் போது…
குத்துற மீசை கருப்புதான்…
அசத்தும் கருப்புதான்…


Notes : Karupputhan Enakku Pidicha Colouru Song Lyrics in Tamil. This Song from Vetri Kodi Kattu (2000). Song Lyrics penned by Pa. Vijay. கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு பாடல் வரிகள்.