கண்ணம்மா கண்ணம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்விஜய் யேசுதாஸ் & எஸ். காயத்ரிஜி.வி. பிரகாஷ் குமார்சேவல்

Kannamma Kannamma Song Lyrics in Tamil


பெண் : கண்ணம்மா கண்ணம்மா…
பதில் சொல்லம்மா பதில் சொல்லம்மா…

BGM

பெண் : கண்ணம்மா கண்ணம்மா…
பதில் சொல்லம்மா பதில் சொல்லம்மா…
என்னம்மா என்னம்மா…
பாசம் வச்சதே ஒரு குத்தமா…

பெண் : உன்னை எண்ணிப் பார்க்காமலே விட்டுத்தந்தேனே…
என் காதலைதான் நானும் இப்ப தத்துத் தந்தேனே…
உன் கூரையில நானும் வாழ ஆசைப்பட்டேனே…
ஒரு பாசத்துக்கு நானும் இப்போ வாக்கப்பட்டேனே…

பெண் : என் காதல் ஒரு காத்தாடியாய் துள்ளி வந்ததே…
அது பாசம் என்னும் கம்பத்திலே மாட்டிக்கிட்டதே…
நான் பட்டக்கடன் தீர்க்க இப்ப நேரம் வந்ததே…
அந்த நேரத்தில நம்ம காதல் தூரம் போனதே…

பெண் : யாரோடு சாபமோ வாழாத வரைத்தான்…
நம்ம ரெண்டு பேரின் நெஞ்சைக் குத்திக் கொள்ளுதே… ஓ…

ஆண் : கண்ணம்மா கண்ணம்மா…
பதில் சொல்லம்மா பதில் சொல்லம்மா…
குத்தம்மா குத்தம்மா…
ஆசை வச்சதே ஒரு குத்தம்மா…

ஆண் : ஒத்த வார்த்தைக் கேட்கும்போதே சொத்துப்போனேன்னே…
நான் ஓடி வந்து நிக்கும்போதே சாம்பல் ஆனேன்னே…
உன்னைப் பார்த்து என்னென்னமோ கேக்க வந்தேனே…
என் வார்த்தையெல்லாம் தொலைஞ்சி இப்ப ஊமை ஆனேன்னே…

ஆண் : என் காதல் தேரும் தேரடியை சேரவில்லையே…
உன் காலடியில் நொருங்கிப்போச்சு தேரவில்லையே…

ஆண் : என் துக்கத்துக்கு மருந்த எங்கு இருக்கு…
அடி திக்கி திக்கி பேசும் உந்தன் கண்ணில் இருக்கு…

ஆண் : யார் செஞ்ச பாவமோ பாம்பாக மாறிதான்…
நம்ம ரெண்டு பேரு கால சுத்தி கெடக்கு… ஓஒஒ… ஓஒஓஒ…

BGM

ஆண் : கண்ணம்மா கண்ணம்மா…
பதில் சொல்லம்மா பதில் சொல்லம்மா…


Notes : Kannamma Kannamma Song Lyrics in Tamil. This Song from Seval (2008). Song Lyrics penned by Na.Muthukumar. கண்ணம்மா கண்ணம்மா பாடல் வரிகள்.