கண்ணால் பேசும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம்வித்யாசாகர்மொழி

Kannaal Pesum Penne Song Lyrics in Tamil


ஆண் : கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா…
கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா…
சலவை செய்த நிலவே எனை மன்னிப்பாயா…
சிறு தவறை தவறி செய்தேன் எனை மன்னிப்பாயா…

ஆண் : எனது கோரிக்கை நீ கேளடி கேளடி…
உனது கோபங்களும் ஏனடி…
உனது சில்லென்ற கண்ணில் பாரடி பாரடி…
எனது சாபங்களை தீரடி…

ஆண் : கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா…
ஒரு கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா…

—BGM—

ஆண் : நிலா பேசுவது இல்லை…
அது ஒரு குறை இல்லையே… ஆ…
குறை அழகென்று கொண்டால்…
வாழ்க்கையில் எங்கும் பிழையில்லையே…

ஆண் : பெண்ணே அறிந்துகொண்டேன் இயல்பே அழகு என்றேன்…
பூவை வரைந்து அதிலே மீசை வரையமாட்டேன்…
மௌனம் பேசும் போது சத்தம் கேட்க மாட்டேன்…
மூன்றாம் பிறையின் உள்ளே நிலவைத் தேடமாட்டேன்…

ஆண் : வாழ்வோ துவர்க்குதடி வயசோ கசக்குதடி…
சைகையிலே எனை மன்னித்து சாபம் தீரடி…

ஆண் : ஓ ஐ எம் சாரி ஐ எம் சாரி ஐ எம் சாரி…
ஓ ஹோ ஐ எம் சாரி ஐ எம் சாரி ஐ எம் சாரி…
ஓ ஐ எம் சாரி ஐ எம் சாரி ஐ எம் சாரி…
ஓ ஹோ ஐ எம் சாரி ஐ எம் சாரி ஐ எம் சாரி…

ஆண் : கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா…
ஒரு கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா…

—BGM—

ஆண் : எங்கே குறுநகை எங்கே…
குறும்புகள் எங்கே கூறடி… ஓ…
கண்ணில் கடல் கொண்ட கண்ணில்…
புயல் சின்னம் ஏதோ தெரியுதடி…

ஆண் : செல்லக் கொஞ்சல் வேண்டாம் சின்னச் சிணுங்கல் போதும்…
பார்த்துப் பழக வேண்டாம் பாதிச் சிரிப்பு போதும்…
காரப்பார்வை வேண்டாம் ஓரப்பார்வை போதும்…
வாசல் திறக்க வேண்டாம் ஜன்னல் மட்டும் போதும்…

ஆண் : வாழ்க்கை கடக்குதடி நாட்கள் நரைக்குதடி…
இரு கண்ணால் என் வாழ்வை நீ ஈரம் செய்யடி…

ஆண் : ஓ ஐ எம் சாரி ஐ எம் சாரி ஐ எம் சாரி…
ஓ ஹோ ஐ எம் சாரி ஐ எம் சாரி ஐ எம் சாரி…
ஓ ஐ எம் சாரி ஐ எம் சாரி ஐ எம் சாரி…
ஓ ஹோ ஐ எம் சாரி ஐ எம் சாரி ஐ எம் சாரி…

ஆண் : கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா…
கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா…
சலவை செய்த நிலவே எனை மன்னிப்பாயா…
சிறு தவறை தவறி செய்தேன் எனை மன்னிப்பாயா…

ஆண் : எனது கோரிக்கை நீ கேளடி கேளடி…
உனது கோபங்களும் ஏனடி…
உனது சில்லென்ற கண்ணில் பாரடி பாரடி…
எனது சாபங்களை தீரடி…


Notes : Kannaal Pesum Penne Song Lyrics in Tamil. This Song from Mozhi (2007). Song Lyrics penned by Vairamuthu. கண்ணால் பேசும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading