காற்றின் மொழி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபல்ராம்வித்யாசாகர்மொழி

Katrin Mozhi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : காற்றின் மொழி ஒலியா இசையா…
பூவின் மொழி நிறமா மணமா…
கடலின் மொழி அலையா நுரையா…
காதல் மொழி விழியா இதழா…

ஆண் : இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்…
மனிதரின் மொழிகள் தேவையில்லை…
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்…
மனிதர்க்கு மொழியே தேவையில்லை…

ஆண் : காற்றின் மொழி ஒலியா இசையா…
பூவின் மொழி நிறமா மணமா…

—BGM—

ஆண் : காற்று வீசும் போது திசைகள் கிடையாது…
காதல் பேசும் போது மொழி்கள் கிடையாது…
பேசும் வார்த்தை போல மௌனம் புரியாது…
கண்கள் பேசும் வார்த்தை கடவுள் அறியாது…
உலவித்திரியும் காற்றுக்கு உருவம் தீட்ட முடியாது…
காதல் பேசும் மொழியெல்லாம் சப்தக்கூட்டில் அடங்காது…

ஆண் : இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்…
மனிதரின் மொழிகள் தேவையில்லை…
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்…
மனிதர்க்கு மொழியே தேவையில்லை…

ஆண் : காற்றின் மொழி…

—BGM—

ஆண் : வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும்
வானவில்லின் பேச்சு நிறமாய் வெளியாகும்…
உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்…
பெண்மை ஊமையானால் நாணம் மொழியாகும்…
ஓசை தூங்கும் ஜாமத்தில் உச்சி மீன்கள் மொழியாகும்…
ஆசை தூங்கும் இதயத்தில் அசைவுகூட மொழியாகும்…

ஆண் : இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்…
மனிதரின் மொழிகள் தேவையில்லை…
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்…
மனிதர்க்கு மொழியே தேவையில்லை…

ஆண் : காற்றின் மொழி ஒலியா இசையா…
பூவின் மொழி நிறமா மணமா…
கடலின் மொழி அலையா நுரையா…
காதல் மொழி விழியா இதழா…

ஆண் : இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்…
மனிதரின் மொழிகள் தேவையில்லை…
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்…
மனிதர்க்கு மொழியே தேவையில்லை…

ஆண் : காற்றின் மொழி…


Notes : Katrin Mozhi Song Lyrics in Tamil. This Song from Mozhi (2007). Song Lyrics penned by Vairamuthu. காற்றின் மொழி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading