கல்யாணமே ஒரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்வாணி ஜெயராம்எம்.எஸ். விஸ்வநாதன்லலிதா

Kalyaaname Song Lyrics in Tamil


பெண் : கல்யாணமே ஒரு பெண்ணோடுதான்…
கல்யாணமே ஒரு பெண்ணோடுதான்…
இதில் யார் என்ன சொன்னாலும்…
ஊர் என்ன சொன்னாலும்…
உன் வாழ்வு என்னோடுதான்…

பெண் : இதில் யார் என்ன சொன்னாலும்…
ஊர் என்ன சொன்னாலும்…
உன் வாழ்வு என்னோடுதான்…

பெண் : கல்யாணமே ஒரு பெண்ணோடுதான்…

BGM

பெண் : தாயின் வீடு பெண்ணை பெற்று…
தாரை வார்க்கும்வரை…
பெண்ணின் வீடு காலகாலம்…
தலைவன் அழைக்கும் வரை…
அந்த தலைவன் அழைக்கும் வரை…

பெண் : பள்ளிப் பாடம் தாயோடு முடியும்…
பள்ளி முடியாதன்றோ…
பள்ளிப் பாடம் தாயோடு முடியும்…
பள்ளி முடியாதன்றோ…

பெண் : உன் வாழ்வு என்னோடுதான்…
என் வாழ்வு உன்னோடுதான்…

பெண் : கல்யாணமே ஒரு பெண்ணோடுதான்…
இதில் யார் என்ன சொன்னாலும்…
ஊர் என்ன சொன்னாலும்…
உன் வாழ்வு என்னோடுதான்…

BGM

பெண் : ஊடல் கொஞ்சம் நடுவில் வந்தால்…
கூடல் சுகமாவது…

பெண் : ஊடல் கொஞ்சம் நடுவில் வந்தால்…
கூடல் சுகமாவது…
பெண்ணின் சுகத்தை எண்ணித்தானே…
அன்னை மொழி சொன்னது…
அன்னை மொழி சொன்னது…

பெண் : இந்த விளக்கம் எதற்காக சொன்னேன்…
இன்று ஏதாவது…
ஹீம் ஹ்ம்ம் ம்ம்ம் இன்று ஏதாவது…

பெண் : கல்யாணமே ஒரு பெண்ணோடுதான்…

BGM

பெண் : மஞ்சள் போனால் திலகம் கலைந்தால்…
வாழ்வை இழந்தாள் என்பார்…
பள்ளியறையில் இரண்டும் கலைந்தால்…
பாவை வாழ்ந்தாள் என்பார்…

பெண் : மஞ்சள் போனால் திலகம் கலைந்தால்…
வாழ்வை இழந்தாள் என்பார்…
பள்ளியறையில் இரண்டும் கலைந்தால்…
பாவை வாழ்ந்தாள் என்பார்…

பெண் : நேற்று கதையை நேற்றோடு மறப்போம்…
இன்று முதலிரவு இன்று முதலிரவு…
ஹீம் ஹ்ம்ம் ம்ம்ம் இன்று முதலிரவு…

பெண் : கல்யாணமே ஒரு பெண்ணோடுதான்…
இதில் யார் என்ன சொன்னாலும்…
ஊர் என்ன சொன்னாலும்…
உன் வாழ்வு என்னோடுதான்…
என் வாழ்வு உன்னோடுதான்…


Notes : Kalyaaname Song Lyrics in Tamil. This Song from Lalitha (1976). Song Lyrics penned by Kannadasan. கல்யாணமே ஒரு பாடல் வரிகள்.