ஏழேழு ஜென்ம பந்தம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகிதேவாதெற்கு தெரு மச்சான்

Ezhelu Jenma Bandham Song Lyrics in Tamil


BGM

பெண் : ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது…
இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது…
கல்யாணமே ஒரு தெய்வீகமே…
சம்சாரமே அதன் சந்தோசமே…
ஒரு வானும் நிலவும் பிரிந்து வாழுமா…

ஆண் : ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது…
இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது…

BGM

பெண் : வெத்திலையில் பாக்கு வச்சு…
பத்து பேரை சாட்சி வச்சு…
தித்திக்கிற ஆசைக்கெல்லாம் தேதி ஒன்னு உருவாச்சு…

ஆண் : அக்னி சாட்சி வச்சு…
கை விரலை சேத்து வச்சு…
இன்பம் துன்பம் இரண்டிலுமே இணைந்திருக்க முடிவாச்சு…

பெண் : பள்ளியறை பள்ளியிலே படிக்கும் இன்ப வேதம்…
ஆண் : பிள்ளை மணிச் செல்வங்களே அன்னை தந்த கீதம்…
பெண் : இது பழங்கால பாதை ஒரு சுக வாழ்வின் கீதை…

ஆண் : ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது…
இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது…

BGM

ஆண் : சந்தனத்து மழை அடிக்க…
சந்திரனும் கொடை புடிக்க…
செங்கமலச் சூரியன் போல் செல்ல மகன் பிறப்பானே…

பெண் : தங்கத்திலே தூளி கட்டி…
வைரத்திலே மாலை கட்டி…
தத்தி வரும் பாதத்துக்கு முத்து மணி தொடுப்பேனே…

ஆண் : துள்ளி வரும் பிள்ளை நிலா தூய கங்கை மீனு…
பெண் : செம்பவள வாய் திறந்தால் சிந்தி சிதறும் தேனு…
ஆண் : நம் பேர் சொல்ல தானே பிறக்கும் ஒரு மானே…

ஆண் : ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது…
இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது…
கல்யாணமே ஒரு தெய்வீகமே…
சம்சாரமே அதன் சந்தோசமே…
ஒரு வானும் நிலவும் பிரிந்து வாழுமா…

பெண் : ஏழேழு ஜென்ம பந்தம் மனைவி என்பது…
இதில் நீ வேறு நான் வேறு யார் சொன்னது…


Notes : Ezhelu Jenma Bandham Song Lyrics in Tamil. This Song from Therku Theru Machan (1992). Song Lyrics penned by Kalidasan. ஏழேழு ஜென்ம பந்தம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading