வா வா என் வீணையே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & வாணி ஜெய்ராம்கங்கை அமரன்சட்டம்

Vaa Vaa En Veenaiye Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வா வா என் வீணையே…
பெண் : நனனா…
ஆண் : விரலோடு கோபமா…
பெண் : நனனா…
ஆண் : மீட்டாமல் காதல் ராகம் யாவும் விளைந்திடுமா…

ஆண் : கிள்ளாத முல்லையே காற்றோடு கோபமா…
இளம் தென்றல் தேடும் போது ஊடலாகுமா… ஆஆ… ஆஅ…

ஆண் : வா வா என் வீணையே…
பெண் : நனனா…
ஆண் : விரலோடு கோபமா…
பெண் : நனனா நனன் நனனா…

—BGM—

பெண் : தண்டோடு தாமரை ஆட…
வண்டோடு மோகனம் பாட…
நான் பார்க்கையில் நெஞ்சிலே உந்தன் ஞாபகம் கூட…

—BGM—

பெண் : தண்டோடு தாமரை ஆட…
வண்டோடு மோகனம் பாட…
நான் பார்க்கையில் நெஞ்சிலே உந்தன் ஞாபகம் கூட…

ஆண் : துணை தேடுதோ…
தனிமை துயர் கூடுதோ…

பெண் : அணை மீறுதோ…
உணர்ச்சி அலை பாயுதோ…

ஆண் : நாள் தோறும் ராத்திரி மேடையில்…
ரகசிய பாஷையில் பாட…

பெண் : வா வா உன் வீணை நான்…
ஆண் : நனனா…
பெண் : விரல் மீட்டும் வேளைதான்…
ஆண் : நனனா…

பெண் : மீட்டாமல் காதல் ராகம் யாவும் விளைந்திடுமோ…
கிள்ளாத முல்லையே வந்தாள் உன் எல்லையே…
இளம் தென்றல் தேடும் போது ஊடல் ஆகுமோ… ஓஒ… ஓஓ…

—BGM—

ஆண் : சந்தோஷ மந்திரம் ஓத…
சந்தர்ப்பம் சாதகமாக…
நாள் பார்ப்பதோ இன்னமும்…
இன்ப நாடகம் போட…

—BGM—

ஆண் : சந்தோஷ மந்திரம் ஓத…
சந்தர்ப்பம் சாதகமாக…
நாள் பார்ப்பதோ இன்னமும்…
இன்ப நாடகம் போட…

பெண் : இரவாகலாம் இளமை அரங்கேறலாம்…
ஆண் : உறவாடலாம் இனிய சுரம் பாடலாம்…

பெண் : கேட்காத வாத்திய ஓசைகள்…
கேட்கையில் ஆசைகள் தீரும்…

ஆண் : வா வா என் வீணையே…
பெண் : லலலா…
ஆண் : விரலோடு கோபமா…
பெண் : லலலா…

பெண் : மீட்டாமல் காதல் ராகமோ…
யாவும் வளைந்திடுமோ…

ஆண் : கிள்ளாத முல்லையே…
காற்றோடு கோபமா…

பெண் : இளம் தென்றல் தேடும் போது ஊடல் ஆகுமோ… ஓஒ… ஓஒ…

ஆண் : வா வா என் வீணையே…
பெண் : லலலா…
ஆண் : விரலோடு கோபமா…
பெண் : லலலா…

பெண் : வா வா உன் வீணை நான்…
ஆண் : நனனா…
பெண் : விரல் மீட்டும் வேளை தான்…
ஆண் : நனனா நனன் நனனா…


Notes : Vaa Vaa En Veenaiye Song Lyrics in Tamil. This Song from Sattam (1983). Song Lyrics penned by Vaali. வா வா என் வீணையே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading