அம்மம்மா சரணம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & வாணி ஜெய்ராம்கங்கை அமரன்சட்டம்

Ammamma Saranam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள்…
அப்பப்போ தரணும் தரணும் என் தேவைகள்…

ஆண் : அடி ராதா தெரியாதா இளம் போதை…
புது ராதா தொடராதா அதன் பாதை…
கொடுத்தால் நான் எடுத்தால் தேன் வடியாதா…

—BGM—

பெண் : அப்பப்பா பெரிது பெரிது உன் பெண் பக்தி…
அப்பப்போ அறிவேன் அறிவேன் நான் உன் சக்தி…

பெண் : நீதானே நான் போற்றும் சிவலிங்கம்…
இவள் மேனி சரிபாதி உன் அங்கம்
பகலும் நள்ளிரவும் பூஜைகள்தானே…

ஆண் : அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள்…
அப்பப்போ தரணும் தரணும் என் தேவைகள்…

—BGM—

ஆண் : ஆராதனை செய்ய அம்பாளும் இருக்க…
அடியேனும்தான் பாலில் அபிஷேகம் நடத்த…
ஆராதனை செய்ய அம்பாளும் இருக்க…
அடியேனும்தான் பாலில் அபிஷேகம் நடத்த…

பெண் : நீ வாங்க வந்த வரம் என்னவோ…
நீங்காமல் காட்சி தர வேண்டுமோ…

ஆண் : நான் பார்க்க வரம் கேட்க…
அருள் சேர்க்க வா ஈஸ்வரி… ஆ…

பெண் : அப்பப்பா பெரிது பெரிது உன் பெண் பக்தி…
அப்பப்போ அறிவேன் அறிவேன் நான் உன் சக்தி…

—BGM—

பெண் : புல்லாங்குழல் கண்ணன் கையோடு இருக்க…
ராதா மனம் அதை பார்த்தாலே துடிக்க…
புல்லாங்குழல் கண்ணன் கையோடு இருக்க…
ராதா மனம் அதை பார்த்தாலே துடிக்க…

ஆண் : குழலோடு வந்த கோபாலன் நான்… ஹ ஹ…
கோபாலன் பாடும் பூபாளம் நீ…

பெண் : உன் பாட்டு நான் கேட்டு…
பாராட்ட நாள் வேண்டுமோ… ஹோ…

ஆண் : அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள்…
அப்பப்போ தரணும் தரணும் என் தேவைகள்…

ஆண் & பெண் : நீதானே நான் போற்றும் சிவலிங்கம்…
இவள் மேனி சரிபாதி உன் அங்கம்…
கொடுத்தால் நான் எடுத்தால் தேன் வடியாதா ராதா…
தா தா தா தா தா தா…

பெண் : லல்லல்லா லலலா லலலா லல லல்லல்லா…
லல்லல்லா லலலா லலலா லல லல்லல்லா…


Notes : Ammamma Saranam Song Lyrics in Tamil. This Song from Sattam (1983). Song Lyrics penned by Vaali. அம்மம்மா சரணம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading