சங்கத்தில் பாடாத

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்இளையராஜா & எஸ். ஜானகிஇளையராஜாஆட்டோராஜா

Sangathil Padatha Song Lyrics in Tamil


ஆண் : சங்கத்தில் பாடாத கவிதை…
உன் அங்கத்தில் யார் தந்தது…
பெண் : த ர ரரரரரர த ர ரரரரரர…

ஆண் : சந்தத்தில் மாறாத நடையோடு…
என் முன்னே யார் வந்தது…
பெண் : த ரரரரரரர த ரரரரரரர…

ஆண் : தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை…
உன் அங்கத்தில் யார் தந்தது…
பெண் : த ர ரரரரரர த ர ரரரரரர…

—BGM—

ஆண் : கை என்றே செங்காந்தழ் மலரே…
நீ சொன்னால் நான் நம்பவோ…
பெண் : ஆஆஅ… ஆஅ… ஆ…

ஆண் : கால் என்றே செவ்வாழை இலைகளை…
நீ சொன்னால் நான் நம்பி விடவோ…
மை கொஞ்சம்… பொய் கொஞ்சம்…
பெண் : ஆஆ… ஆ…

ஆண் : கண்ணுக்குள் நீ கொண்டு வருவாய்…
காலத்தால் மூவாத உயர் தமிழ்…

ஆண் : சங்கத்தில்…
பெண் : த ர ரரரரரர த ர ரரரரரர…

—BGM—

ஆண் : அந்திப்போர் காணாத இளமை…
ஆடட்டும் என் கைகளில்…
சிந்தித்தேன் செந்தூர இதழ்களில்…
சிந்தித் தேன் பாய்கின்ற உறவை…

பெண் : அந்திப்போர் காணாத இளமை…
ஆடட்டும் என் கைகளில்…
சிந்தித்தேன் செந்தூர இதழ்களில்…
சிந்தித் தேன் பாய்கின்ற உறவை…
கொஞ்சம் தா… கொஞ்சம் தா…

பெண் : கண்ணுக்குள் என்னென்ன நளினம்…
காலத்தால் மூவாத உயர் தமிழ்…

பெண் : சங்கத்தில்…
ஆண் : த ர ரரரரரர த ர ரரரரரர…

—BGM—

ஆண் : ஆடை ஏன் உன் மேனி அழகை…
ஆதிக்கம் செய்கின்றது…
பெண் : ஆஅ… ஆஅ…

ஆண் : நாளைக்கே ஆனந்த விடுதலை…
காணட்டும் காணாத உறவில்…
கை தொட்டு… மெய் தொட்டு…

ஆண் : காமத்தில் தூங்காத விழியும்…
சந்தித்தேன் என்னென்ன மாயம்…

தமிழ் சங்கத்தில் பாடாத கவிதை…
உன் அங்கத்தில் யார் தந்தது…
பெண் : த ர ரரரரரர த ர ரரரரரர…

ஆண் : சந்தத்தில் மாறாத நடையோடு…
என் முன்னே யார் வந்தது…
பெண் : த ரரரரரரர த ரரரரரரர…

ஆண் : தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை…
உன் அங்கத்தில் யார் தந்தது…
ஆண் & பெண் : த ர ரரரரரர த ர ரரரரரர…


Notes : Sangathil Padatha Song Lyrics in Tamil. This Song from Auto Raja (1982). Song Lyrics penned by Pulamaipithan. சங்கத்தில் பாடாத பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading