| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | ஆல்பம் |
| காளி சித்ததாசன் | L.R. ஈஸ்வரி | சோமு & கஜா | அம்மன் பாடல்கள் |
Kalamennum Theril Song Lyrics in Tamil
பெண் : காலமெல்லாம் காத்திருந்தாலும்…
காணக் கிடைக்காதவள் கருமாரி…
கனிந்துருகி உள்ளம் நொந்தவர்க்கு…
கணத்திலே காட்சி தந்திடுவாள் தேவி கருமாரி…
—BGM—
பெண் : காலமெனும் தேரிலேறி கருமாரி நீ வருகையிலே…
காணக் கண் கூசுதம்மா கோடி ஜோதி தெரியுதம்மா…
—BGM-—
பெண் : பூரண நிலவினிலே பொன்மேனி ஒளி விடவே…
புற்றினிலே தோன்றுவாள் எங்கள் கருமாரியம்மா…
புண்பட்ட மனதிலெல்லாம் பூரணமாய் நிறைந்திடவே…
பொங்கிடும் செல்வமெல்லாம் தந்திடுவாள் கருமாரி…
பெண் : காலமெனும் தேரிலேறி கருமாரி நீ வருகையிலே…
காணக் கண் கூசுதம்மா கோடி ஜோதி தெரியுதம்மா…
—BGM—
பெண் : கருநாகமாய் வந்திடுவாள் கைகுவித்த பேருக்கு…
காட்சியும் கொடுத்திடுவாள் எங்கள் கருமாரியம்மா…
திரிசூலம் ஏந்திடுவாள் திருநீறு அணிந்திடுவாள்…
திரிசூலம் ஏந்திடுவாள் திருநீறு அணிந்திடுவாள்…
தீராத நோயெல்லாம் தீர்த்திடுவாள் கருமாரி…
பெண் : சரவிளக்கு சுடர்விடவே…
சாற்றிய மாலையெல்லாம் உருமறைக்க…
கற்பூரம் காட்டியே கை தொழுதால்…
கண் திறந்து பார்த்திடுவாள் எங்கள் கருமாரி…
—BGM—
பெண் : கிணிமணி கிலுகிலுக்க…
கால் சலங்கை சலசலக்க…
—BGM—
பெண் : உடலெங்கும் சிலுசிலுக்க…
உன் சிரிப்பொலி கேட்குதம்மா…
எங்கள் சிந்தையும் குளிருதம்மா…
எங்கள் சிந்தையும் குளிருதம்மா…
—BGM—
பெண் : கருணை உள்ளம் கொண்டவளே எங்கள் கருமாரி…
கண்ணாயிரம் கொண்டவளே எங்கள் கருமாரி…
பொன்னாபரணம் பூண்டவளே எங்கள் கருமாரி…
பண்ணாயிரம் பாட வந்தோம் எங்கள் கருமாரி…
பண்ணாயிரம் பாட வந்தோம் எங்கள் கருமாரி…
பெண் : காலமெனும் தேரிலேறி கருமாரி நீ வருகையிலே…
காணக் கண் கூசுதம்மா கோடி ஜோதி தெரியுதம்மா…
கோடி ஜோதி தெரியுதம்மா…
கோடி ஜோதி தெரியுதம்மா…
Notes : Kalamennum Theril Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Kaali Siddhadasan. காலமெனும் பாடல் வரிகள்.

