காதல் வெப்சைட்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஷங்கர் மகாதேவன், ஹரிணி & டிம்மியுவன் சங்கர் ராஜாதீனா

Kadhal Website Ondru Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : காதல் வெப்சைட் ஒன்று…
கண்டேன் கண்டேன் நானும்…
கண்கள் ரெண்டில் இன்று…

ஆண் : காதல் வைரஸ் வந்து…
கம்ப்யூட்டர் போல் நானும்…
கன்பியூஸ் ஆனேன் இன்று…

ஆண் : ஹார்ட்வேர் உள்ளம் கெட்டு போனதென்ன…
சாப்ட்வேர் என்றே அது ஆனதென்ன…
சம்திங் எனக்குள்ளே நேர்ந்ததென்ன…
உந்தன் கண்கள் என்னை கடத்தி போக போக…

குழு : சென்டிமீட்டர் தூதரும் இல்லை…
நீ கேசட் தருவதற்கில்லை…
நான் தோற்றேன் உன்னிடம் என்னை… ஓ ஓஹோ…

குழு : ஐ லவ் யூ டேஞ்சரஸ் பேபி…
நான் என்றும் உன்னிடம் கைதி…
நியூஸ் சேனல் சொல்லுமே செய்தி… ஓ ஓஹோ…

—BGM—

ஆண் : அக்குபஞ்சர் நீடிலா…
துர்கி சிக்கன் நூடிலா…
அன்பே ஆடை கொஞ்சும் உந்தன் இடையிலா…

ஆண் : டோனால்ட் டக் இன் ஜாதியா…
டிஸ்னி டால்பின் ஜோடியா…
அன்பே ஆடி செல்லும் உந்தன் நடையிலா…

—BGM—

ஆண் : காதல் வெப்சைட் ஒன்று…
காதல் வெப்சைட் ஒன்று…
கண்டேன் கண்டேன் நானும்…
கண்கள் ரெண்டில் இன்று…

—BGM—

பெண் : ஹாட் பாக்ஸில் வைத்த பூ உண்பதில்லை…
இனி வாழ்வில் எந்த நாளும்…
என் உள்ளம் எங்கும் நீ நின்றிருக்க…
உன்னை உஷ்ணம் தாக்க கூடும்…

பெண் : கேளடா காதலா…
தனிமைதான் ட்ராக்குலா…

ஆண் : மிஸ்ஸிப்பி மெல்ல அலைகளை தாண்டி…
பசிஃபிக்கில் வந்து விழிந்தது பார்…
மகிழ்ச்சியில் இதழ் சிரிப்பினை மாற்றும்…
சிரிப்பினில் புது சிம்ஃபனி கேட்கும்…

ஆண் : நீ ஒரு சன் ஃப்ளவர்…
கவிதையில் உந்தன் அழகினை பாட…
நான் ஒரு ஷேக்ஸ்பியர்…
ஓ ஓ ஓ ஓஹோ ஹா ஆ…

குழு : என் அன்பே காதல் காதல்தான்…
இதூலகம் எழுந்து எதுத்தாலும்…
லவ் செய்வோம் மீண்டும் மீண்டும் வா… ஓ ஓஹோ…

—BGM—

பெண் : இந்த சாக்ஸபோன இரு கையில் ஏந்தி…
பில் கிளிண்டன் போல வாசி…
இவள் கன்னி அல்ல ஒரு கணினி என்று…
பில் கேட்ஸை போல நேசி…

பெண் : சொல்லடா மன்மதா…
பில்லு நீ என்பதா…

ஆண் : ப்ரிட்ஜினில் உள்ள ஃப்ரீசரை போல…
குளிர் தர ஒரு துணையுண்டு வா…
விழிகளில் ஒரு பேக் பண்ணு மானே…
விரைவினில் வந்து உதவிடுவேனே…

ஆண் : சம்மதம் வின்டர்ரா…
இவளது விரல் படுகிற போது…
குவாட்டரும் லிக்கரா…
ஓ ஓ ஓ ஓஹோ ஹா ஆ…

குழு : என் உயிரே இந்த நூற்றாண்டில்…
ஓர் கவிஞன் எவனும் எழுதாத…
லவ் போயம் நீயும் நானும்தான்… ஓ ஓஹோ…

குழு : இவ்வுலகில் எங்கு போனாலும்…
ஓர் இளைஞன் இதயம் கொடி ஏந்தும்…
லவ் லாகோ நீயும் நானும்தான்…
ஓ ஓ ஓஹோஹோ…

ஆண் : காதல் வெப்சைட் ஒன்று…
கண்டேன் கண்டேன் நானும்…
கண்கள் ரெண்டில் இன்று…

ஆண் : ஹார்ட்வேர் உள்ளம் கெட்டு போனதென்ன…
சாப்ட்வேர் என்றே அது ஆனதென்ன…
சம்திங் எனக்குள்ளே நேர்ந்ததென்ன…
உந்தன் கண்கள் என்னை கடத்தி போக போக…

—BGM—


Notes : Kadhal Website Ondru Song Lyrics in Tamil. This Song from Dheena (2001). Song Lyrics penned by Vaali. காதல் வெப்சைட் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading