காதல் மட்டும் புரிவதில்லை

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிவிஜய் யேசுதாஸ்யுவன் ஷங்கர் ராஜாகாதல் கொண்டேன்

Kadhal Mattum Purivathillai Song Lyrics in Tamil


ஆண் : காதல் காதல் காதலில் நெஞ்சம்…
கண்ணாமூச்சி ஆடுதடா…
தேடும் கண்ணில் பட படவென்று…
பட்டாம்பூச்சி ஓடுதடா…

ஆண் : எங்கேயோ எங்கேயோ…
இவனை இவனே தேடுகிறான்…
தாய் மொழி எல்லாம் மறந்து விட்டு…
தனக்குள் தானே பேசுகிறான்…

ஆண் : காதல் மட்டும் புரிவதில்லை…
காற்றா நெருப்பா தெரிவதில்லை…
காதல் தந்த மூர்ச்சை நிலை…
நான் கண்கள் திறந்தும் தெளியவில்லை…

—BGM—

ஆண் : காதல் காதல் காதலில் நெஞ்சம்…
கண்ணாமூச்சி ஆடுதடா…
தேடும் கண்ணில் பட படவென்று…
பட்டாம்பூச்சி ஓடுதடா…

—BGM—

ஆண் : ஹே… நேற்று வரைக்கும் இங்கிருந்தேன்…
இன்று என்னை காணவில்லை…
வெயில் இல்லை மழை இல்லை…
பார்த்தேனே வானவில்லை…

ஆண் : என் நெஞ்சோடு ரசித்தேன்…
கொல்லாமல் கொல்கின்ற அழகை…
உயிரில் ஓர் வண்ணம் குழைத்து…
வரைந்தேன் அவளை…

ஆண் : காதல் மட்டும் புரிவதில்லை…
காற்றா நெருப்பா தெரிவதில்லை…
காதல் தந்த மூர்ச்சை நிலை…
நான் கண்கள் திறந்தும் தெளியவில்லை…

—BGM—

ஆண் : காதல் காதல் காதலில் நெஞ்சம்…
கண்ணாமூச்சி ஆடுதடா…
தேடும் கண்ணில் பட படவென்று…
பட்டாம்பூச்சி ஓடுதடா…

—BGM—

ஆண் : பாலைவனத்தில் நடந்திருந்தேன்…
நீ வந்து குடை விரித்தாய்…
எந்தன் பெயரே மறந்திருந்தேன்…
நீ இன்று குரல் கொடுத்தாய்…

ஆண் : என் கண்ணாடி மனதில்…
இப்போது என் முகம் பார்த்தேன்…
நீ வந்த பொழுதில்…
எந்தன் நெஞ்சம் பூத்தேன்…

ஆண் : நதிகள் கடலில் தெரிவதில்லை…
நட்பில் கவலை புரிவதில்லை…
இதயம் ரெண்டும் சேர்ந்திருந்தால்…
இரவும் பகலும் பார்ப்பதில்லை…

—BGM—

ஆண் : காதல் காதல் காதலில் நெஞ்சம்…
கண்ணாமூச்சி ஆடுதடா…
தேடும் கண்ணில் பட படவென்று…
பட்டாம்பூச்சி ஓடுதடா…

ஆண் : எங்கேயோ எங்கேயோ…
இவனை இவனே தேடுகிறான்…
தாய் மொழி எல்லாம் மறந்து விட்டு…
தனக்குள் தானே பேசுகிறான்…

ஆண் : காதல் மட்டும் புரிவதில்லை…
காற்றா நெருப்பா தெரிவதில்லை…
காதல் தந்த மூர்ச்சை நிலை…
நான் கண்கள் திறந்தும் தெளியவில்லை…


Notes : Kadhal Mattum Purivathillai Song Lyrics in Tamil. This Song from Kaadhal Kondein (2003). Song Lyrics penned by Pazhani Bharathi. காதல் மட்டும் புரிவதில்லை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading