வெண்மேகம் பெண்ணாக

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிஹரன்யுவன் ஷங்கர் ராஜாயாரடி நீ மோகினி

Venmegam Pennaga Song Lyrics in Tamil


ஆண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்…
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்…
லலல லலலலா…

ஆண் : வெண்மேகம் பெண்ணாக உருவானதோ…
என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ…
உன்னாலே பல ஞாபகம்…
என் முன்னே வந்தாடுதே…
ஒரு நெஞ்சம் திண்டாடுதே…

ஆண் : வார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என்ன…
பார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன…
உன்னாலே பல ஞாபகம்…
என் முன்னே வந்தாடுதே…
ஒரு நெஞ்சம் திண்டாடுதே…

ஆண் : வெண்மேகம் பெண்ணாக உருவானதோ…
என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ…

BGM

ஆண் : மஞ்சள் வெயில் நீ…
மின்னல் ஒளி நீ…
உன்னைக் கண்டவரை கண் கலங்க…
நிற்க வைக்கும் தீ…

ஆண் : பெண்ணே என்னடி உண்மை சொல்லடி…
ஒரு புன்னகையில் பெண்ணினமே கோபபட்டதென்னடி…
தேவதை வாழ்வது வீடில்லை கோயில்…
கடவுளின் கால் தடம் பார்க்கிறேன்…
ஒன்றா இரண்டா உன் அழகை பாட…

ஆண் : கண் மூடி ஒரு ஓரம் நான் சாய்கிறேன்…
கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிறேன்…
உன்னாலே பல ஞாபகம்…
என் முன்னே வந்தாடுதே…
ஒரு நெஞ்சம் திண்டாடுதே…

BGM

ஆண் : எங்கள் மனதை கொள்ளை அடித்தாய்…
இந்த தந்திரமும் மந்திரமும் எங்கு சென்று படித்தாய்…
விழி அசைவில் வலை விரித்தாய்…
உன்னை பல்லக்கினில் தூக்கி செல்ல…
கட்டளைகள் விதித்தாய்…

ஆண் : உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்க…
உயிருடன் வாழ்கிறேன் நானடி…
என் காதலும் என்னாகுமோ…
உன் பாதத்தில் மண்ணாகுமோ…

BGM

ஆண் : வெண்மேகம் பெண்ணாக உருவானதோ…
என் நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ…

BGM


Notes : Venmegam Pennaga Song Lyrics in Tamil. This Song from Yaaradi Nee Mohini (2008). Song Lyrics penned by Na. Muthu Kumar. வெண்மேகம் பெண்ணாக பாடல் வரிகள்.


Scroll to Top