காதல் என்னும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பொன்னடியான்மலேசியா வாசுதேவன்இளையராஜாமணிக்குயில்

Kadhal Ennum Vedham Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : காதல் என்னும் வேதம் இங்கு…
கண்ணீரில் வாடுதம்மா…
நடுக் கானகத்தில் கண் விழித்து…
பொன்மானைத் தேடுதம்மா…

ஆண் : என் ஆவியே வேகுதே…
புண்ணாகியே போனதே…
அன்பாலே தவிக்குதடி…
என் நெஞ்சு துடிக்குதடி…

ஆண் : காதல் என்னும் வேதம் இங்கு…
கண்ணீரில் வாடுதம்மா…
நடுக் கானகத்தில் கண் விழித்து…
பொன்மானைத் தேடுதம்மா…

—BGM—

ஆண் : பாட்டெடுத்து கற்றுக் கொடுத்து…
பாட வைத்ததும் ஏனடியோ…
மேடையிலே பாட வந்தால்…
மூடி வைத்ததும் ஏனடியோ…

ஆண் : நேற்றைய கனவெல்லாம் காற்றின் கதைதானோ…
அரங்கேற்றம் காணாத ஒரு பாட்டின் பொருள்தானோ…
புத்தம் புது புத்தகம் செல்லரித்துப் போகுமா…
சிங்காரப் பைங்கிளியே…

ஆண் : காதல் என்னும் வேதம் இங்கு…
கண்ணீரில் வாடுதம்மா…
நடுக் கானகத்தில் கண் விழித்து…
பொன் மானைத் தேடுதம்மா…

ஆண் : என் ஆவியே வேகுதே…
புண்ணாகியே போனதே…
அன்பாலே தவிக்குதடி…
என் நெஞ்சு துடிக்குதடி…

ஆண் : காதல் என்னும் வேதம் இங்கு…
கண்ணீரில் வாடுதம்மா…
நடுக் கானகத்தில் கண் விழித்து…
பொன் மானைத் தேடுதம்மா…

—BGM—

ஆண் : களங்கம் இல்லா மனதினிலே…
காலை வைத்தது யாரடியோ…
கலங்கி நின்ற போதினிலே…
கல்லெறிந்ததும் ஏனடியோ…

ஆண் : அழகாய் அகல் விளக்கை…
அங்கு யாரோ ஏற்றி வைத்தார்…
அலை வீசும் சுடர் ஒளியை…
திரை போட்டே மூடி வைத்தார்…

ஆண் : இந்தத் திரை விலகும்…
இன்பக் கதை தொடரும்…
சிங்காரப் பைங்கிளியே…

ஆண் : காதல் என்னும் வேதம் இங்கு…
கண்ணீரில் வாடுதம்மா…
நடுக் கானகத்தில் கண் விழித்து…
பொன் மானைத் தேடுதம்மா…

ஆண் : என் ஆவியே வேகுதே…
புண்ணாகியே போனதே…
அன்பாலே தவிக்குதடி…
என் நெஞ்சு துடிக்குதடி…

ஆண் : காதல் என்னும் வேதம் இங்கு…
கண்ணீரில் வாடுதம்மா…
நடுக் கானகத்தில் கண் விழித்து…
பொன் மானைத் தேடுதம்மா…


Notes : Kadhal Ennum Vedham Song Lyrics in Tamil. This Song from Manikuyil (1993). Song Lyrics penned by Ponnadiyan. காதல் என்னும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading