தண்ணீரிலே முகம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பொன்னடியான்மனோ & உமா ரமணன்இளையராஜாமணிக்குயில்

Thaneeriley Mugam Song Lyrics in Tamil


BGM

பெண் : தண்ணீரிலே முகம் பார்க்கும் ஆகாயமே…
நல்ல பன்னீரிலே நீராடும் பூந்தோட்டமே…

பெண் : இன்னார்க்கு இன்னார்தான் சாமி சொன்னதம்மா…
கல்யாணம் வைபோகம் தன்னால் ஆகுமம்மா…
இனி உன்னை விட்டு நான் வாழ ஆகாதம்மா…

ஆண் : தண்ணீரிலே முகம் பார்க்கும் ஆகாயமே…
நல்ல பன்னீரிலே நீராடும் பூந்தோட்டமே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : உன்னிடத்தில் இத்தனை நாள்…
உண்மை ஒன்றை மறைத்ததுண்டு…
சின்னஞ்சிறு வயது முதல்…
எனக்கொரு மனைவி உண்டு…

ஆண் : கோபம் கொள்ள வேண்டாம் அம்மா… ஹோய்…
தாங்கிக் கொள்ள வேண்டும் அம்மா…

பெண் : நல்லவன் என்று உன்னையே நினைத்தேனே…
உண்மை அறிந்து துடித்தேன் நான்தானே…
போட்டதென்ன வேஷம் இனி போதும் போதும் மோசம்…

ஆண் : நான் சொன்ன சம்சாரம் எந்தன் சங்கீதம்…
இதைக் கண்டு கொள்ள முடியாமல் ஆர்பாட்டமா…

பெண் : தண்ணீரிலே முகம் பார்க்கும் ஆகாயமே…
நல்ல பன்னீரிலே நீராடும் பூந்தோட்டமே…

ஆண் : இன்னார்க்கு இன்னார்தான் சாமி சொன்னதம்மா…
கல்யாணம் வைபோகம் தன்னால் ஆகுமம்மா…
இனி உன்னை விட்டு நான் வாழ ஆகாதம்மா…

ஆண் : தண்ணீரிலே முகம் பார்க்கும் ஆகாயமே…
நல்ல பன்னீரிலே நீராடும் பூந்தோட்டமே…

BGM

பெண் : நெஞ்சை அள்ளும் பாடலிலே…
என்னை அள்ளிக் கொடுத்துவிட்டேன்…
நல்ல இசைத் தேடலிலே…
வேறெதையும் மறந்துவிட்டேன்…

பெண் : என்னுடைய சங்கீதம் நீ… ஹோ ஹோ…
உன்னுடைய சாரீரம் நான்…

ஆண் : ஒன்றை ஒன்றுதான் இனி மேல் பிரியாது…
அள்ள அள்ளத்தான் அமுதம் குறையாது…
தெள்ளு தமிழ் பள்ளு உன் கண்ணில் உள்ள கள்ளு…

பெண் : எந்நாளும் உன் நாதம் என்னை நீங்காது…
இனி காலம் தோறும் ஓயாது ஆலாபனம்…

ஆண் : தண்ணீரிலே முகம் பார்க்கும் ஆகாயமே…
நல்ல பன்னீரிலே நீராடும் பூந்தோட்டமே…

பெண் : இன்னார்க்கு இன்னார்தான் சாமி சொன்னதம்மா…
கல்யாணம் வைபோகம் தன்னால் ஆகுமம்மா…
ஆண் : இனி உன்னைவிட்டு நான் வாழ ஆகாதம்மா…

பெண் : தண்ணீரிலே முகம் பார்க்கும் ஆகாயமே…
ஆண் : நல்ல பன்னீரிலே நீராடும் பூந்தோட்டமே…


Notes : Thaneeriley Mugam Song Lyrics in Tamil. This Song from Manikuyil (1993). Song Lyrics penned by Ponnadiyan. தண்ணீரிலே முகம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading