காதல் நிலாவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஅருண்மொழி & உமா ரமணன்இளையராஜாமணிக்குயில்

Kadhal Nilavey Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : காதல் நிலாவே பூவே…
கை மீது சேர வா…
ஆசைக் கனாவே வாழ்வே…
ஆவல்கள் தீர வா…

ஆண் : மணி ஊஞ்சல் தானாட…
அதன் மேலே நானாட…
இள மாலை நேரம்தான்…

பெண் : காதல் நிலாவே பூவே…
கை மீது சேர வா…
ஆசைக் கனாவே வாழ்வே…
ஆவல்கள் தீர வா…

—BGM—

ஆண் : ஏட்டில் ஒரு பாவலன்…
எழுதாத காவியம்…
நாட்டில் ஒரு தூரிகை…
புனையாத ஓவியம்…

பெண் : நீ வளர்க்க என் கண்…
தேடுது உன் சொந்தம்…
தேன் வளர்க்க என் வாய்…
பாடுது உன் சந்தம்…

ஆண் : நீராடும் ஓடையே…
எனக்கென குளிர் சேர்க்கும் வாடையே…
மோகம் எந்நாளும் என்னை வாட்டுதே…
அன்பே வா… ஆஆ…

பெண் : காதல் நிலாவே பூவே…
கை மீது சேர வா…
ஆசைக் கனாவே வாழ்வே…
ஆவல்கள் தீர வா…

பெண் : மணி ஊஞ்சல் தானாட…
அதன் மேலே நானாட…
இள மாலை நேரம்தான்…

ஆண் : காதல் நிலாவே பூவே…
கை மீது சேர வா…

—BGM—

பெண் : நாளும் உனைக் கூவிடும்…
குயிலாக பூங்குயில்…
நீயும் எனை வாட்டினால்…
உறவேது பூமியில்…

ஆண் : நான் விரும்பும் பொன் மான்…
தாமரை நெஞ்சம்…
நாள் முழுக்க என் மேல்…
சாய்ந்திடக் கெஞ்சும்…

பெண் : சேராது உன் மடி…
தனிமையில் தூங்காது பூங்கொடி…
கூடும் சந்தோஷம் இன்று வாய்த்ததே…
அன்பே வா… ஆஆ…

ஆண் : காதல் நிலாவே பூவே…
கை மீது சேர வா…
ஆசைக் கனாவே வாழ்வே…
ஆவல்கள் தீர வா…

பெண் : மணி ஊஞ்சல் தானாட…
அதன் மேலே நானாட…
இள மாலை நேரம்தான்…

ஆண் : காதல் நிலாவே பூவே…
கை மீது சேர வா…

பெண் : ஆசைக் கனாவே…
வாழ்வே ஆவல்கள் தீர வா…


Notes : Kadhal Nilavey Song Lyrics in Tamil. This Song from Manikuyil (1993). Song Lyrics penned by Vaali. காதல் நிலாவே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading