அதோ அந்த நதியோரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகிஇளையராஜாஏழை ஜாதி

Adho Antha Nadhiyoram Song Lyrics in Tamil


பெண் : அதோ அந்த நதியோரம்…
இளம் காதலர் மாடம்…
இதோ இந்த வனமெல்லாம்…
எங்கள் காவியக் கூடம்…

BGM

பெண் : அதோ அந்த நதியோரம்…
இளம் காதலர் மாடம்…
இதோ இந்த வனமெல்லாம்…
எங்கள் காவியக் கூடம்…

குழு : அவன் வருகின்ற நேரம்…
நான் தழுவிட வேண்டும்…
இது விரகத்தின் வேகம் விலகிடு என் தோழி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : அதோ அந்த நதியோரம்…
இளம் காதலர் மாடம்…
இதோ இந்த வனமெல்லாம்…
எங்கள் காவியக் கூடம்…

BGM

பெண் : தூது செல்லடி தோழி வான்மதி…
மாது நிம்மதி மறைந்ததடி குறைந்ததடி…
சேதி சொல்லடி தேனின் நாயகி…
தேகம் பாதியாய் கரைந்ததடி கலங்குதடி…

பெண் : அணை போட்ட போதும் நிலை மாறிடாது…
அலை போல மோதும் மனம் தாங்கிடாது…
நீ இல்லாத போதிலே வாழ்வதேது காதலே…
நினைக்காத நேரம் ஏது வாடும் போது கூறு தூது…

குழு : அவன் வர வேண்டும்…
நான் தழுவிட வேண்டும்…
இது விரகத்தின் வேகம் விலகிடு என் தோழி…

பெண் : அதோ அந்த நதியோரம்…
இளம் காதலர் மாடம்…
இதோ இந்த வனமெல்லாம்…
எங்கள் காவியக் கூடம்…

BGM

பெண் : கூடல் என்பது கூடி வந்தது…
தேடி வந்தது திரை மறைவில் தெரிகிறது…
தேகம் என்பது கோவில் போன்றது…
யாகம் செய்ய வா பலன் உடனே கிடைக்கின்றது…

பெண் : சுகம் மாலை சூடும்…
தினம் ராகம் பாடும்…
சுவை நாளும் கூடும்…
துயர் யாவும் ஓடும்…

பெண் : காதல் என்ற தேகமே…
ஆளுகின்ற யோகமே…
கலைக் கோயில் தீபம் ஏற்று…
பாடிப் போற்று ஆசை ஊற்று…

குழு : கரம் தொடும் போது…
சுக வரம் தரும் மாது…
இரு கரம் தொடும் போது…
சுக வரம் தரும் பூமாது…

பெண் : அதோ அந்த நதியோரம்…
இளம் காதலர் மாடம்…
இதோ இந்த வனமெல்லாம்…
எங்கள் காவியக் கூடம்…

குழு : அவன் வர வேண்டும்…
நான் தழுவிட வேண்டும்…
இது விரகத்தின் வேகம் விலகிடு என் தோழி…

பெண் : அதோ அந்த நதியோரம்…
இளம் காதலர் மாடம்…
இதோ இந்த வனமெல்லாம்…
எங்கள் காவியக் கூடம்…


Notes : Adho Antha Nadhiyoram Song Lyrics in Tamil. This Song from Ezhai Jaathi (1993). Song Lyrics penned by Vaali. அதோ அந்த நதியோரம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading