கொடுத்தாலும் கொடுத்தான்டா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோஇளையராஜாஏழை ஜாதி

Koduthalum Koduthaanda Song Lyrics in Tamil


ஆண் : கொடுத்தாலும் கொடுத்தான்டா…
நல்ல எடம் பாத்து கொடுத்தான்டா…

—BGM—

ஆண் : கொடுத்தாலும் கொடுத்தான்டா…
நல்ல எடம் பாத்து கொடுத்தான்டா…
கொடுப்பான்டா இன்னும் கொடுப்பான்டா…
எவரானாலும் கொடுப்பான்டா…

ஆண் : ஊரில் ஊழல்கள் செய்வோருக்கும்…
ஒண்ண பத்தாகச் சொல்வோருக்கும்…

குழு : கொடுத்தாலும் கொடுத்தான்டா…
நல்ல எடம் பாத்து கொடுத்தான்டா…

ஆண் : கொடுப்பான்டா இன்னும் கொடுப்பான்டா…
எவரானாலும் கொடுப்பான்டா… ஹா…

—BGM—

ஆண் : தேசம் காக்க வந்த சட்டம் திட்டம்…
காச விட்டெறிஞ்சா எட்ட நிக்கும்…
வேலி போட்டு வெச்ச சீமான்களும்…
வேதம் ஓதுகிற சாத்தான்கள்தான்…

ஆண் : எங்கேயும் எப்போதும்…
குழு : லஞ்சம் இருக்கு…
ஆண் : ஓய் வாங்காத கைகளும்தான்…
குழு : கொஞ்சம் இருக்கு…

ஆண் : எல்லாருமே கல்லாட்டமா…
நின்னாக்கா என்னாகும் நம் நாடு…
வக்காலத்து வாங்கிடவே வந்தாரு அண்ணாச்சி அதப் பாடு…
அடிக்காம சில மாடு அதுவா மெதுவா படியாது…

குழு : கொடுத்தாலும் கொடுத்தான்டா…
நல்ல எடம் பாத்து கொடுத்தான்டா…

ஆண் : ஹான்… கொடுப்பான்டா இன்னும் கொடுப்பான்டா…
எவரானாலும் கொடுப்பான்டா…

ஆண் : ஊரில் ஊழல்கள் செய்வோருக்கும்…
ஒண்ண பத்தாகச் சொல்வோருக்கும்…

குழு : கொடுத்தாலும் கொடுத்தான்டா…
நல்ல எடம் பாத்து கொடுத்தான்டா…

—BGM—

ஆண் : தொகுதி மக்களுக்கு துன்பமுன்னா…
வரணும் சட்ட சபை மெம்பர் அண்ணா…
பணத்தச் சுருட்டுறதே எண்ணமுன்னா… ஹா…
பாடம் சொல்லிடணும் மீண்டும் நின்னா…

ஆண் : எம்.எல்.ஏ நம்மால வந்த பதவி…
ஹோய்… என்றாலும் யாருக்கு என்ன உதவி…
எல்லாத்துக்கும் நோட்டு வைக்கத்தான்…
ஏழைக்கும் பாழைக்கும் ஆகாது…

ஆண் : வெக்காவிட்டால் மக்களுக்கெல்லாம்…
உண்டான துன்பங்கள் தீராது…
இதைக் கேக்க துணிஞ்சாக்கா…
இது போல் தவறு நடக்காது…

குழு : கொடுத்தாலும் கொடுத்தான்டா…
நல்ல எடம் பாத்து கொடுத்தான்டா…

ஆண் : ஹாஹா… கொடுப்பான்டா இன்னும் கொடுப்பான்டா…
எவரானாலும் கொடுப்பான்டா…

ஆண் : ஊரில் ஊழல்கள் செய்வோருக்கும்…
ஒண்ண பத்தாகச் சொல்வோருக்கும்…

குழு : கொடுத்தாலும் கொடுத்தான்டா…
நல்ல எடம் பாத்து கொடுத்தான்டா…
ஹாஹா… கொடுப்பான்டா இன்னும் கொடுப்பான்டா…
எவரானாலும் கொடுப்பான்டா…


Notes : Koduthalum Koduthaanda Song Lyrics in Tamil. This Song from Ezhai Jaathi (1993). Song Lyrics penned by Vaali. கொடுத்தாலும் கொடுத்தான்டா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading