உலகழகியா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்அனுராதா ஸ்ரீராம், ஹரிணி & ஸ்ரீனிவாஸ்எஸ். ஏ. ராஜ்குமார்பாட்டாளி

Ulagazhagiya Song Lyrics in Tamil


BGM

பெண் : உலகழகியா… ஆஆஆஆ…
பேரழகியா… ஆஆஆஆ…
கனவுலகிலே… ஆஆஆ…
நீ ராணியா… ஆஆஆஆ…

பெண் : என் அழகுதான் சாகாவரம்…
என் எதிரில் நீ சாதாரணம்…
என் போல போலிகள் உண்டு…
நான் ஒரிஜினல் புது வைரக்கல்… ஹா…

பெண் : உலகழகிதான்… ஆஆஆஆ…
பேரழகிதான்… ஆஆஆஆ…
நிஜ உலகிலே… ஆஆஆஆ…
நான் ராணி தான்… ஆஆஆஆ…

பெண் : என் அழகுதான் ராஜாவிடம்…
அவர் எதிரில் நான் பிருந்தாவனம்…
என் பார்வை ஒன்றே போதும்…
உனை வெல்லுவேன்… நெவர்…
புகழ் அள்ளுவேன்… நோ சான்ஸ்…

பெண் : உலகழகியா… ஆஆஆஆ…
பேரழகியா… ஆஆஆஆ…

BGM

பெண் : உன்னிலா என்னிலா யாரிடம் சுகம்…
பெண்ணினம் சொல்லுமே நான் முதல் தரம்…

பெண் : மின்னும் எந்தன் கண்கள் மீன்களுக்கும் இல்லை…
என்னைப் போன்ற வெண்மை வான் நிலவில் இல்லை…

ஆண் : ஆஹ்… அழகுக்கிங்கு அறிமுகம் ஏனோ…
அரைக் குடத்தின் அவசரம்தானோ…

பெண் : நோ நடப்பதொரு நளினத்தின் போட்டி…
எனக்குள்ளே ஆயிரம் ப்யூட்டி…

பெண் : மேல் நாட்டின் மாடல்கள் கூட…
என் கால்களில்…
நான் தேர்களில்…

பெண் : உலகழகியா… ஆஆஆஆ…
பேரழகியா… ஆஆஆஆ…

BGM

பெண் : மின்னிடும் மின்மினி ஆயிரம் வரும்…
வெண்ணிலா மட்டுமே வானத்தை தொடும்…

பெண் : கை அசைவில்கொடி தத்தை சொல்லுவேனே…
கண்ணசைவில் மாறன் கரைந்துவிடுவானே…

ஆண் : ஐயோ அவரவரின் ரசனைகள் வேறு…
அதற்கு ஒரு முடிவில்லை பாரு…

பெண் : நடையழகில் நானொரு ராணி…
எனை ரசித்து வணங்கணுமே…

பெண் : எல்லோர்க்கும் விதம் விதமாக…
அழகை வைத்தான்… ஹையோ…
மனம் கவரத்தான்… யாயாயாயா…

ஆண் : உலகழகிதான்… பெண் : ஆஆஆஆ…
ஆண் : பேரழகிதான்… பெண் : ஆஆஆ…
ஆண் : ஒரு மேடையில்… பெண் : ஆஆஆஆ…
ஆண் : இரு நிலவுத்தான்… பெண் : ஆஆஆஆ…

ஆண் : ஒரு நிலவுதான் சாகாவரம்…
மறு நிலவுதான் பிருந்தாவனம்…
பிடிவாத போட்டிகள் வேண்டாம்…
என் எதிரிலே…
நான் பொதுவிலே…


Notes : Ulagazhagiya Song Lyrics in Tamil. This Song from Paattali (1999). Song Lyrics penned by Kaalidasan. உலகழகியா பாடல் வரிகள்.


Scroll to Top