சின்ன சின்ன வீட்டு வேலை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாஅனுராதா ஸ்ரீராம் & சுஜாதா மோகன்எஸ். ஏ. ராஜ்குமார்பாட்டாளி

Chinna Chinna Veetu Vella Song Lyrics in Tamil

BGM

பெண் : சின்ன சின்ன வீட்டு வேலை செய்வதெப்படி தோழி…
ட்யூஷன் சொல்லி நீயும் எனக்கு டீச்சர் ஆகணும்…

பெண் : சீமையிலே புத்தகம் சுமந்த தாமரைப்பூ நீதான்…
ஊரு சனம் உசிரில் சுமந்து நீச்சல் போடணும்…

பெண் : வாஷிங்மிஷினுல நான் பழச வெளுக்கணும்…
வீட்டு வேல செஞ்சுதான் நம்ம மனச ஜெயிக்கணும்…

குழு : பனி ரோஜா பூவுக்குத்தான் பழகி கொடுக்கணும்…
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ…
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ…

பெண் : சின்ன சின்ன வீட்டு வேலை செய்வதெப்படி தோழி…
ட்யூஷன் சொல்லி நீயும் எனக்கு டீச்சர் ஆகணும்… ஓகே…

BGM

பெண் : தண்ணிக் குடம் இடுப்பிலே தளும்பிடாம சுமக்கணும்…

BGM

பெண் : தண்ணிக் குடம் இடுப்பிலே தளும்பிடாம சுமக்கணும்…

பெண் : மண் தரைய மெழுகணும் சும்மா மழமழன்னு இருக்கணும்…
லண்டனுல படிச்சுதான் குண்டான் கழுவ தெரியல…

பெண் : கத்துகொடு நான் இப்போ ரெண்டாங்கெட்டான் நிலையிலே…

பெண் : பொழுது சாயும் நேரம் குத்துவிளக்க ஏத்த வேணும்…
மருதாணி வைக்கணும் அது புருஷன் கண்ண தைக்கணும்…

பெண் : முத்துப்பல்லு சிரிப்புக்கு பத்து புள்ள பொறக்கணும்…
கடிகார முள்ளப் போல ஒண்ணா இருக்கணும்…

குழு : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ…
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ…

BGM

பெண் : சின்ன சின்ன வீட்டு வேலை செய்வதெப்படி தோழி…
ட்யூஷன் சொல்லி நீயும் எனக்கு டீச்சர் ஆகணும்…

BGM

பெண் : நாத்து நடும் நெலத்துல நாலாப் பக்கமும் பாக்கணும்…

BGM

பெண் : நாத்து நடும் நெலத்துல நாலாப் பக்கமும் பாக்கணும்…
நட்ட பின்பு சம்பளத்த எண்ணிப் பாத்து கொடுக்கணும்…

பெண் : எய்ட் அவர்ஸ் ட்யூட்டியில எத்தன ஏக்கர் முடிக்கணும்…
இடையில லஞ்சுக்கு எப்படி டைம ஒதுக்கணும்…

பெண் : கவர்மெண்ட்டு போல மணிக் கணக்கு இதுக்கு இல்ல…
காலையில தொடங்கணும் பொழுது சாய முடிக்கணும்…

பெண் : சொத்து சொகம் சேர்க்கணும்…
சிக்கனம் புடிச்சு பார்க்கணும்…

பெண் : மகராசி உன்னப் பாத்து ஊரு வாழ்த்தணும்…

குழு : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ…
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ…

பெண் : சின்ன சின்ன வீட்டு வேலை செய்வதெப்படி தோழி…
ட்யூஷன் சொல்லி நீயும் எனக்கு டீச்சர் ஆகணும்…

பெண் : சீமையிலே புத்தகம் சுமந்த தாமரைப்பூ நீதான்…
புருசன் உசிரில் சுமந்து நீச்சல் போடணும்…

பெண் : வாஷிங்மிஷினுல நான் பழச வெளுக்கணும்…
வீட்டு வேல செஞ்சுதான் மாமன் மனச ஜெயிக்கணும்…

பெண் : பனி ரோஜா பூவுக்குத்தான் பழகி கொடுக்கணும்

குழு : ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ…
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ…

Notes : Chinna Chinna Veetu Vella Song Lyrics in Tamil. This Song from Paattali (1999). Song Lyrics penned by Viveka. சின்ன சின்ன வீட்டு வேலை பாடல் வரிகள்.

Scroll to Top