வண்ண தேரோடும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்மனோஎஸ். ஏ. ராஜ்குமார்பாட்டாளி

Vanna Therodum Song Lyrics in Tamil


BGM

ஆண் : வண்ணத் தேரோடும் பூமியிலே…
செல்லத் தாயான பூமகளே…
எங்க சந்தோஷப் பாடலிலே…
உன்னைக் கொண்டாடும் நேரமிதே…

ஆண் : மணமாலை உறவிலே…
மாயக்கண்ணன் வரவிலே…
ஒரு தாயும் சேயுமே…
நலம் கூடி வாழவே…
கனவுகள் மடியினில் மலர்கிறதே…

BGM

ஆண் : ஊர் பார்க்கவே என் பேர் சொல்லும்…
முத்தொன்று சிப்பிக்குள் விளையாடுதோ…
நாளை வரும் நம் பிள்ளைதான்…
என் தந்தை யாரென்று விடை கேட்குது…

ஆண் : நீ போட்ட பாதையில் உன்னை இணைந்தேன்…
பாசத்தில் நான் அன்று என்னை இழந்தேன்…

ஆண் : நிழலுக்கு பொட்டு வச்சு…
நிஜத்தை விட்டுவிட்டு…
மனதுக்கு கட்டுப்பட்டு மயங்கினேன்…
இன்று நானடி அடி பூங்கொடி…

BGM

ஆண் : வண்ணத் தேரோடும் பூமியிலே…
செல்லத் தாயான பூமகளே…
எங்க சந்தோஷப் பாடலிலே…
உன்னைக் கொண்டாடும் நேரமிதே…

BGM

ஆண் : மேகங்களை கையால் அள்ளி…
என் பிள்ளை கண் தூங்க மெத்தை செய்வேன்…
ரோஜாக்களை ஒன்றாக்கியே…
பூவுக்கு பூவாலே சட்டை நெய்வேன்…

ஆண் : வானத்து வில் மீது வண்ணம் எடுப்பேன்…
மாணிக்கம் கண் கூச மாலை தொடுப்பேன்…

ஆண் : நிலாவினில் தொட்டில் கட்டி…
நட்சத்திரத்தை வெட்டி…
குழந்தைக்கு பொட்டு வைக்கும்…
சூரியவம்சம் தானடி அது நானடி…

BGM

ஆண் : வண்ணத் தேரோடும் பூமியிலே…
செல்லத் தாயான பூமகளே…
எங்க சந்தோஷப் பாடலிலே…
உன்னைக் கொண்டாடும் நேரமிதே…

ஆண் : மணமாலை உறவிலே…
மாயக்கண்ணன் வரவிலே…
ஒரு தாயும் சேயுமே நலம் கூடி வாழவே…
கனவுகள் மடியினில் மலர்கிறதே…

BGM


Notes : Vanna Therodum Song Lyrics in Tamil. This Song from Paattali (1999). Song Lyrics penned by Kalidasan. வண்ண தேரோடும் பாடல் வரிகள்.


Scroll to Top