ஹே சீதா ஹே ராமா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஎஸ்.பி.பி. சரண் & சிந்துரிவிஷால் சந்திரசேகர்சீதா ராமம்

Hey Sita Hey Rama Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹே சீதா…
உயிர் நுழைய வாசல் தா…
ஹே சீதா…
உன்னில் வசிக்க வாய்ப்பை தா…

ஆண் : என்றும் பிரிந்திடா வண்ணம்…
உந்தன் கையை இறுக்கியே கோர்க்க தா…

ஆண் : பூமி அறிந்திடா காதல் ஒன்றை தருவேன்…
நிரப்ப உன் நெஞ்சம் தா…
தனிமையில் உன்னை நான் நீங்காத…
உரிமை வேண்டும் தா…

பெண் : ஹே ராமா…
எனை பிரிய வேண்டாமா…
ஹே ராமா…
நிழல் அறிய வேண்டாமா…

பெண் : நாளை நிகழ்ந்திடும் காட்சி ஒன்றை…
இன்றே எழுதுகோல் தீட்டுமா…
நேற்றே எழுதிய பாடல் ஒன்றை…
காலம் நாளையும் மீட்டுமா…

பெண் : ரகசிய நெருப்பு ஒன்றென்னுள்ளே…
இருக்குமா சும்மா…

ஆண் : ஹே சீதா…
இந்த திரிக்கி தீயை தா…

பெண் : ஹே ராமா…
எனை பிரிய வேண்டாமா…

BGM

ஆண் : கண்களை கண்கள் கொய்கையில்…
நெஞ்சில் வானவில் மான்களா…
வார்த்தைகள் மாயம் செய்கையில்…
வானில் தூரிகை மீன்களா…

பெண் : ஓ… வலக்கண்ணில் ஊஞ்சலாடும் மயக்கம்…
இடக்கண்ணில் தாயமாடும் தயக்கம்…

பெண் : பாவம் நானென பாரடா…
என்ன செய்குவேன் கூறடா…
கொஞ்சும் சலங்கைகள் விலங்கினானால்…
என் உலகம் என்னாகும்…

BGM

பெண் : இரவிலே பேசும் தலையணை…
அதற்கு உன் பெயர் சூட்டு நீ…
உன்னை நான் கூடும் நாளில்…
என் செய்கிறேன் என்று நான் காட்டினேன்…

ஆண் : விழி நீ மூட உன் கன்னம் தீண்டும்…
தலையணை போல் நான் வாழ வேண்டும்…

ஆண் : மனதின் கூக்குரல் கேட்குமா…
வலிகள் ஓவியம் ஆகுமா…
உனை நான் அருகிலே கண்டு…
உருகி வீழ்கையில் அள்ளி கொள்ளம்மா…

பெண் : ஹே ராமா…
உயிர் உருக வேண்டாமா…
நான் அள்ளி…
அதை பருக வேண்டாமா…

ஆண் : என்றும் பிரிந்திடா வண்ணம்…
உந்தன் கையை இறுக்கியே கோர்க்க தா…
பூமி அறிந்திடா காதல் ஒன்றை தருவேன்…
நிரப்ப உன் நெஞ்சம் தா…

ஆண் : தனிமையில் உன்னை நான் நீங்காத…
உரிமை வேண்டும் தா…


Notes : Hey Sita Hey Rama Song Lyrics in Tamil. This Song from Sita Ramam (2022). Song Lyrics penned by Madhan Karky. ஹே சீதா ஹே ராமா பாடல் வரிகள்.


Scroll to Top