கப்பலேறிப் போயாச்சு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & பி. சுசீலாஏ.ஆர்.ரகுமான்இந்தியன்

Kappaleri Poyaachu Song Lyrics in Tamil


BGM

குழு : கப்பலேறிப் போயாச்சு…
சுத்தமான ஊராச்சு கண்ணம்மா…
நட்ட நடு ராவாச்சு…
நட்ட விதை பூவாச்சு பொன்னம்மா…

குழு : விடியும் வரையில் போராடினோம்…
உதிரம் நதியாய் நீராடினோம்…
வெக்கலெல்லாம் வாளாச்சு…
துக்கமெல்லாம் தூளாச்சு…
கண்ணம்மா… கண்ணம்மா…

ஆண் : நம்ம வாசல் தேடி சாரல் வரும்…
நெடு வானம் தூவும் தூறல் வரும்…
குழு : வாழ்வில் சூழ்ந்த சோகம் யாவும்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : கப்பலேறிப் போயாச்சு…
சுத்தமான ஊராச்சு கண்ணம்மா…
நட்ட நடு ராவாச்சு…
நட்ட விதை பூவாச்சு பொன்னம்மா…

BGM

பெண் : வண்ணமான் வஞ்சிமான் நீர் கோலம்…
கண்களால் கன்னத்தில் போட…
இன்னுமா இன்னுமா போர்க்கோலம்…
இங்கு நீ அங்கு நான் போராட…

பெண் : உனைக் கேட்டா என் நெஞ்சை…
அள்ளிக் கொடுத்தேன்…
தினம் நான்தான் என் அன்பே…
முள்ளில் படுத்தேன்…

பெண் : நானோர் தீவா ஆனேன் வா வா…
அம்மம்மா நாளெல்லாம்…
கானல் நீரைக் குடித்தேன்…

குழு : கப்பலேறிப் போயாச்சு…
சுத்தமான ஊராச்சு கண்ணம்மா…
நட்ட நடு ராவாச்சு…
நட்ட விதை பூவாச்சு பொன்னம்மா…

BGM

ஆண் : அன்னமே அன்னமே நான் சொல்லி…
வந்ததா தென்றலும் நேற்று…
உன்னையே உன்னையே நான் எண்ணி…
வெந்ததைச் சொன்னதா பூங்காற்று…

ஆண் : உந்தன் காலில் மெட்டி போல்…
கூட நடப்பேன்…
உந்தன் கண்ணுக்குக் கண்ணீர் போல்…
காவல் இருப்பேன்…

ஆண் : மாலை சூடி…
தோளில் ஆடி…
கைதொட்டு மெய்தொட்டு…
உன்னில் என்னைக் கரைப்பேன்…

குழு : கப்பலேறிப் போயாச்சு…
சுத்தமான ஊராச்சு கண்ணம்மா…
நட்ட நடு ராவாச்சு…
நட்ட விதை பூவாச்சு பொன்னம்மா…

BGM


Notes : Kappaleri Poyaachu Song Lyrics in Tamil. This Song from Indian (1996). Song Lyrics penned by Vaali. கப்பலேறிப் போயாச்சு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading