கடவுளுக்கு கோரிக்கை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மிஸ்கின்பிரியங்கா என் கேமிஸ்கின்டெவில்

Kadavulukku korikkai Song Lyrics in Tamil


—BGM—

பெண் : விடியல் தேடும் மனிதருக்கு…
நீ ஒளி தருவாய்…
மடியில் தாங்கும் மன்னிப்பை…
நீ போற்றிடுவாய்…

பெண் : மழைமேகம் என் மனதில்…
இடி தாங்கிட வலிமை தந்திடுவாய்…
மழைமேகம் என் மனதில்…
இடி தாங்கிட வலிமை தந்திடுவாய்…

பெண் : விடியல் தேடும் மனிதருக்கு…
நீ ஒளி தருவாய்…
மடியில் தாங்கும் மன்னிப்பை…
நீ போற்றிடுவாய்…

—BGM—

பெண் : உள்ளச் சிறுமை அகல…
உன் கருணை கொஞ்சம் வேண்டும்…
கண்ணில் களங்கம் விலக…
உன் கண்ணியம் கொஞ்சம் வேண்டும்…

—BGM—

பெண் : உள்ளச் சிறுமை அகல…
உன் கருணை கொஞ்சம் வேண்டும்…
கண்ணில் களங்கம் விலக…
உன் கண்ணியம் கொஞ்சம் வேண்டும்…

பெண் : மடமை குழைத்து விதி செய்யும்…
மனிதரை கரையில் இறக்கிவிடு…
கயமை இழைத்து பழி செய்யும்…
மனிதரின் அறிவில் தெளிவு கொடு…
மனிதரின் அறிவில் தெளிவு கொடு…

பெண் : விடியல் தேடும் மனிதருக்கு…
நீ ஒளி தருவாய்…
மடியில் தாங்கும் மன்னிப்பை…
நீ போற்றிடுவாய்…

—BGM—

பெண் : தீமை எதிரில் நிற்க…
என் தோளில் உறுதி வேண்டும்…
பாவம் செய்யாதிருக்க…
உன் தூய்மை கொஞ்சம் வேண்டும்…

—BGM—

பெண் : தீமை எதிரில் நிற்க…
என் தோளில் உறுதி வேண்டும்…
பாவம் செய்யாதிருக்க…
உன் தூய்மை கொஞ்சம் வேண்டும்…

பெண் : தரும் மறந்த மூடருக்கு…
புண்ணியம் செய்வதை குறைத்து விடு…
சத்தியம் சுமக்கும் மாந்தருக்கு…
தண்டனை கொடுப்பதை நிறுத்திவிடு…
தண்டனை கொடுப்பதை நிறுத்திவிடு…

பெண் : விடியல் தேடும் மனிதருக்கு…
நீ ஒளி தருவாய்…
மடியில் தாங்கும் மன்னிப்பை…
நீ போற்றிடுவாய்…

—BGM—

பெண் : கீழ்மை பேயை விரட்ட…
உன் சாட்டை மீதி வேண்டும்…
சோகம் எதையும் சுமக்க…
உன் சிலுவை பாதி வேண்டும்…

—BGM—

பெண் : கீழ்மை பேயை விரட்ட…
உன் சாட்டை மீதி வேண்டும்…
சோகம் எதையும் சுமக்க…
உன் சிலுவை பாதி வேண்டும்…

பெண் : பேதம் தூண்டும் மனிதருக்கு…
நரக வாசலை காட்டுவிடு…
மனிதம் தழுவும் புனிதருக்கு…
உன் சொர்க்க கதவை திறந்து விடு…
சொர்க்க கதவை திறந்து விடு…

பெண் : விடியல் தேடும் மனிதருக்கு…
நீ ஒளி தருவாய்…
மடியில் தாங்கும் மன்னிப்பை…
நீ போற்றிடுவாய்…

பெண் : மழைமேகம் என் மனதில்…
இடி தாங்கிட வலிமை தந்திடுவாய்…
மழைமேகம் என் மனதில்…
இடி தாங்கிட வலிமை தந்திடுவாய்…

பெண் : விடியல் தேடும் மனிதருக்கு…
நீ ஒளி தருவாய்…
மடியில் தாங்கும் மன்னிப்பை…
நீ போற்றிடுவாய்…

—BGM—


Notes : Kadavulukku korikkai Song Lyrics in Tamil. This Song from Devil (2023). Song Lyrics penned by Mysskin. கடவுளுக்கு கோரிக்கை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading