காலை இளம் கதிரில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
உளுந்தூர்பேட்டை சண்முகம்சீர்காழி கோவிந்தராஜன்டி.பி.ராமச்சந்திரன்முருகன் பாடல்கள்

Kaalai Ilangathir Song Lyrics in Tamil

—BGM—

ஆண் : காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது…
கடல் அலையில் மயில் எழுந்து நடனம் புரியுது…
முருகா… காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது…
நீல கடல் அலையில் மயில் எழுந்து நடனம் புரியுது…
கலையாதது நிலையாகுது கதியாகுது…

ஆண் : காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது… ஓஓ…

—BGM—

ஆண் : மாலை வெயில் மஞ்சளிலே உன் மேனி மின்னுது…
அந்த கோலம் கண்டு உள்ளம் கொள்ளை உறுதி கொள்ளுது…
மாலை வெயில் மஞ்சளிலே உன் மேனி மின்னுது…
அந்த கோலம் கண்டு உள்ளம் கொள்ளை உறுதி கொள்ளுது…

ஆண் : குமரா உனை மனம் நாடுது கூத்தாடுது… முருகா…

ஆண் : காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது…
கடல் அலையில் மயில் எழுந்து நடனம் புரியுது…
முருகா… காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது… ஓஓ…

—BGM—

ஆண் : சோலை மலர் கூட்டம் உந்தன் தோற்றம் கொள்ளுது…
சிவ சுப்ரமண்யம் சுப்ரமண்யம் என்று சொல்லுது…
சோலை மலர் கூட்டம் உந்தன் தோற்றம் கொள்ளுது…
சிவ சுப்ரமண்யம் சுப்ரமண்யம் என்று சொல்லுது…

ஆண் : சுகம் ஆகுது குக நாமமே சொல் ஆகுது… முருகா…

ஆண் : காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது…
கடல் அலையில் மயில் எழுந்து நடனம் புரியுது…
முருகா… காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது… ஓஓ…

—BGM—

ஆண் : வேலை ஏந்தும் வீரம் வெற்பு சிகரம் ஆகுது…
வெற்றிவேல் சக்திவேலா என்றே சேவல் கூவுது…
சக்திவேல் சக்திவேல் என்றே சேவல் கூவுது…
சக்திவேல்வேல் சக்திவேல்வேல் என்றே சேவல் கூவுது…

ஆண் : வேலை ஏந்தும் வீரம் வெற்பு சிகரம் ஆகுது…
வெற்றிவேல் சக்திவேலா என்றே சேவல் கூவுது…

ஆண் : வினை ஓடுது வடிவேல் அது துணையாகுது ஆகுது…

ஆண் : காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது…
நீல கடல் அலையில் மயில் எழுந்து நடனம் புரியுது…
முருகா… காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது… ஓஓ…

—BGM—

ஆண் : பார்க்கின்ற காட்சியெல்லாம் நீயாகவே…
நான் பாடுகின்ற பாட்டெல்லாம்…
முருகா… முருகா…

ஆண் : பாடுகின்ற பாட்டெல்லாம் நினக்காகவே…
முருகா… பார்க்கின்ற காட்சியெல்லாம் நீயாகவே…
நான் பாடுகின்ற பாட்டெல்லாம் நினக்காகவே…

ஆண் : உருவாகுது திருவாகுது குருநாதனே முருகா…

ஆண் : காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது…
நீல கடல் அலையில் மயில் எழுந்து நடனம் புரியுது…

ஆண் : கலையாதது நிலையாகுது கதியாகுது…

ஆண் : காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது…
நீல கடல் அலையில் மயில் எழுந்து நடனம் புரியுது…

ஆண் : குருநாதனே முருகா…
குருநாதனே முருகா…
குருநாதனே முருகா…
குருநாதனே முருகா…

Notes : Kaalai Ilangathir Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Ulundurpettai Shanmugam. காலை இளம் கதிரில் பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading