தின்னாதே என்னை தின்னாதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷங்கர் மகாதேவன் & அனுராதா ஸ்ரீராம்பரத்வாஜ்பார்த்தேன் ரசித்தேன்

Thinnathe Thinnathe Song Lyrics in Tamil


ஆண் : தின்னாதே என்னை தின்னாதே…
தின்னாதே என்னை தின்னாதே…

—BGM—

ஆண் : தின்னாதே என்னை தின்னாதே…
சுட்டு விழியில் என்னை சுட்டு தின்னாதே…
நீ சைவம்தானே பெண்ணே என்னை தின்னாதே…
ஜோடி கண்ணில் என்னை கொத்தி…
ஜோடி மாா்பில் என்னை குத்தி கொன்றவளே…

ஆண் : தின்னாதே என்னை தின்னாதே…
தின்னாதே என்னை தின்னாதே…

பெண் : சீ சீ சீ சீ சீ சீ…
சீண்டாதே என்னை சீண்டாதே…
தின்னுவதை விடவும் இங்கு…
தின்னபடுதல் இன்னும் இன்பம் அல்லவா அல்லவா…
சீண்டாதே என்னை சீண்டாதே…

—BGM—

ஆண் : பெண் வாடை அறியாத முனியாக நானிருந்தேன்…
முந்தானை பூவாசம் காட்டிவிட்டாயே…

—BGM—

பெண் : ஒரு ஒரு ஒரு பாவம் அறியாத பூவாக நான் இருந்தேன்…
பூ மீது பெட்ரோலை ஊற்றிவிட்டாயே…

ஆண் : பூவுக்குள்ளே தீ பிடித்தால்…
கொதிக்க கொதிக்க தேன் கிடைக்கும்…

பெண் : சுட சுட குடித்து விடு…
தீா்ந்த பிறகும் தேன் சுரக்கும்…

ஆண் : பாா்வை என்னும் ஈட்டி போட்டு…
கொன்று என்னை கூறு போட்டு…
உதட்டு மீது அடுப்பு மூட்டி சமைப்பவளே…

ஆண் : தின்னாதே என்னை தின்னாதே…
தின்னாதே என்னை தின்னாதே…

பெண் : சீண்டாதே என்னை சீண்டாதே…

—BGM—

ஆண் : ஒரு நூறு பேராறு உள்நாட்டில் ஓடுகையில்…
உன் தாகம் தீர என் குருதி கேட்டாயே…

—BGM—

பெண் : சுவையாறு என்பாா்கள்…
சுவை ஏழு என்பேன் நான்…
இதழ் கொண்ட சுவை சொல்ல மறந்துவிட்டாரே…

ஆண் : ஆ… குடலுக்கு பசி எடுத்தால்…
உணவு கொடுக்க அடங்கிவிடும்…

பெண் : உடலுக்கு பசி எடுத்தால்…
கொடுக்க கொடுக்க வளா்ந்துவிடும்…

ஆண் : வண்டு விழியில் என்னை கொன்று…
சுண்டு விரலில் துண்டு செய்து…
மாா்பு சூட்டில் என்னை சுட்டு சமைத்தவளே…

ஆண் : தின்னாதே என்னை தின்னாதே…
தின்னாதே என்னை தின்னாதே…

ஆண் : தின்னாதே ஓ தின்னாதே…
சுட்டு விழியில் என்னை சுட்டு தின்னாதே…
நீ சைவம் தானே பெண்ணே என்னை தின்னாதே…
ஜோடி கண்ணில் என்னை கொத்தி…
ஜோடி மாா்பில் என்னை குத்தி கொன்றவளே…

ஆண் : தின்னாதே என்னை தின்னாதே…
தின்னாதே… தின்னாதே…


Notes : Thinnathe Thinnathe Song Lyrics in Tamil. This Song from Parthen Rasithen (2000). Song Lyrics penned by Vairamuthu. தின்னாதே என்னை தின்னாதே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading