பார்த்தேன் ரசித்தேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துயுகேந்திரன் & ரேஷ்மிபரத்வாஜ்பார்த்தேன் ரசித்தேன்

Parthen Rasithen Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பார்த்தேன் பார்த்தேன்…
பார்த்தேன்…
சுட சுட ரசித்தேன்…
ரசித்தேன் ரசித்தேன்…

ஆண் : இரு விழி தவணை முறையில்…
என்னை கொல்லுதே…

ஆண் : பார்த்தேன் பார்த்தேன்…
பார்த்தேன்…
சுட சுட ரசித்தேன்…
ரசித்தேன் ரசித்தேன்…

ஆண் : இரு விழி தவணை முறையில்…
என்னை கொல்லுதே…

ஆண் : கட்டழகு கன்னத்தில் அடிக்க…
கண்ணுக்குள்ளே பூகம்பம் வெடிக்க…
கம்பன் இல்லை மிச்சத்தை உரைக்க…
அடடா அடடா அடடா அடடா…

ஆண் : பார்த்தேன் பார்த்தேன்…
பார்த்தேன்…
சுட சுட ரசித்தேன்…
ரசித்தேன் ரசித்தேன்…

ஆண் : இரு விழி தவணை முறையில்…
என்னை கொல்லுதே… ஹே… ஹே… ஹே…

—BGM—

ஆண் : கண்ணும் கண்ணும் மோதிய வேளை…
சில நொடி நானும் சுவாசிக்கவில்லை…
கடவுள் பார்த்த பக்தன் போலே…
கையும் காலும் ஓட வில்லை…

பெண் : பார்த்து பார்த்து…
ரசித்தேன் ரசித்தேன்…
உன்னை பார்த்து பார்த்து…
ரசித்தேன் ரசித்தேன்…

ஆண் : தேவதையும் பேருந்தில் வருமா…
கனவா நனவா தோன்றவும் இல்லை…
நல்ல வேளை சிறகுகள் இல்லை…
நானும் அதனால் நம்பவில்லை…

பெண் : ஆஆ… ஹா…
ஆண் : நெற்றி என்ற மேடையிலே…
பெண் : ஆஆ… ஹா…
ஆண் : ஒற்றை முடியை ஆடவிட்டாள்…
பெண் : ஆஆ… ஹா…
ஆண் : ஒற்றை முடியில் என்னை கட்டி…
பெண் : ஆஆ… ஹா…
ஆண் : உச்சி வெயிலில் தூக்கிலிட்டாள்…

ஆண் : மனதில் இத்தனை ரணமா…
அட வலியில் இத்தனை சுகமா…
அடடா அடடா அடடா அடடா…

ஆண் : பார்த்தேன் பார்த்தேன்…
பார்த்தேன்…
சுட சுட ரசித்தேன்…
ரசித்தேன் ரசித்தேன்…

ஆண் : இரு விழி தவணை முறையில்…
என்னை கொல்லுதே…

—BGM—

ஆண் : வேலை தேடும் இளைஞன் கேட்டேன்…
காதல் செய்யும் வேலை போடு…
வந்த என்னை வேண்டாம் என்றால்…
அணைத்து அணைத்தே கொன்று விடு…

பெண் : பார்த்து பார்த்து…
ரசித்தேன் ரசித்தேன்…
உன்னை பார்த்து பார்த்து…
ரசித்தேன் ரசித்தேன்…

ஆண் : உலர்ந்து போன எந்தன் வாழ்வை…
நாக்கின் நுனியால் ஈரமாக்கு…
உறைந்து போன எந்தன் இரவை…
ஓர பார்வையில் உருக விடு…

பெண் : ஆஆ… ஹா…
ஆண் : என்னை தவிர ஆண்கள் எல்லாம்…
பெண் : ஆஆ… ஹா…
ஆண் : பெண்களாகி போனால் கூட…
பெண் : ஆஆ… ஹா…
ஆண் : உன்னை தவிர இன்னொரு பெண்ணை…
பெண் : ஆஆ… ஹா…
ஆண் : உச்சி மோர்ந்து பார்ப்பதும் இல்லை…

ஆண் : மனதில் இத்தனை ரணமா…
அட வலியில் இத்தனை சுகமா…
அடடா அடடா அடடா அடடா…

ஆண் : பார்த்தேன் பார்த்தேன்…
பார்த்தேன்…
சுட சுட ரசித்தேன்…
ரசித்தேன் ரசித்தேன்…

ஆண் : இரு விழி தவணை முறையில்…
என்னை கொல்லுதே…

பெண் : பார்த்து பார்த்து…
ரசித்தேன் ரசித்தேன்…

ஆண் : பார்த்தேன் பார்த்தேன்…
பார்த்தேன்…
சுட சுட ரசித்தேன்…
ரசித்தேன் ரசித்தேன்…

ஆண் : இரு விழி தவணை முறையில்…
என்னை கொல்லுதே…

பெண் : பார்த்து பார்த்து…
ரசித்தேன் ரசித்தேன்…

ஆண் : கட்டழகு கன்னத்தில் அடிக்க…
கண்ணுக்குள்ளே பூகம்பம் வெடிக்க…
கம்பன் இல்லை மிச்சத்தை உரைக்க…
அடடா அடடா அடடா அடடா…

ஆண் : பார்த்தேன் பார்த்தேன்…
பார்த்தேன்…
சுட சுட ரசித்தேன்…
ரசித்தேன் ரசித்தேன்…

ஆண் : இரு விழி தவணை முறையில்…
என்னை கொல்லுதே…

—BGM—


Notes : Parthen Rasithen Song Lyrics in Tamil. This Song from Parthen Rasithen (2000). Song Lyrics penned by Vairamuthu. பார்த்தேன் ரசித்தேன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading