பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பா.விஜய் | ஜி. வி. பிரகாஷ்குமார் & சக்திஸ்ரீ கோபாலன் | ஜி. வி. பிரகாஷ்குமார் | ராஜா ராணி |
Imaye Imaye Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : இமையே இமையே விலகும் இமையே…
விழியே விழியே பிரியும் விழியே…
எது நீ எது நான் இதயம் அதிலே…
புரியும் நொடியில் பிரியும் கனமே…
ஆண் : பனியில் மூடிப்போன பாதை மீது வெயில் வீசுமா…
இதயம் பேசுகின்ற வார்த்தை உந்தன் காதில் கேட்குமா…
ஆண் : அடி மனதில் இறங்கிவிட்டாய்…
அணு அணுவாய் கலந்துவிட்டாய்…
அடி மனதில் இறங்கிவிட்டாய்…
அணு அணுவாய் கலந்துவிட்டாய்…
—BGM—
பெண் : இமையே இமையே விலகும் இமையே…
விழியே விழியேபிரியும் விழியே…
எது நீ எது நான் இதயம் அதிலே…
புரியும் நொடியில் பிரியும் கனமே…
பெண் : சிறகு நீட்டுகின்ற நேரம் பார்த்து…
வான் எல்லாம் மழை…
வரைந்து காட்டுகின்ற வண்ணம் என்ன…
செய்ததோப் பிழை…
ஆண் : ஓ… அடி மனதில் இறங்கிவிட்டாய்…
அணு அணுவாய் கலந்துவிட்டாய்…
பெண் : அடி மனதில் இறங்கிவிட்டாய்…
அணு அணுவாய் கலந்துவிட்டாய்…
பெண் : ஆ… ஆ… ஆ… ஆ…
ஆ… ஆ… ஆ… ஆ…
Notes : Imaye Imaye Song Lyrics in Tamil. This Song from Raja Rani (2013). Song Lyrics penned by Pa Vijay. இமையே இமையே பாடல் வரிகள்.