இதயத்தை ஏதோ ஒன்று

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைசின்மயிஹாரிஸ் ஜெயராஜ்என்னை அறிந்தால்

Idhayathai Yedho Ondru Song Lyrics in Tamil


—BGM—

பெண் : இதயத்தை ஏதோ ஒன்று…
இழுக்குது கொஞ்சம் இன்று…
இதுவரை இதுபோலே நானும் இல்லையே…

—BGM—

பெண் : கடலலை போலே வந்து…
கரைகளை அள்ளும் ஒன்று…
முழுகிட மனதும் பின் வாங்கவில்லையே…

பெண் : இருப்பது ஒரு மனது…
இதுவரை அது எனது…
என்னைவிட்டு மெதுவாய் அது…
போக கண்டேனே…

பெண் : இது ஒரு கனவு நிலை…
கலைத்திட விரும்பவில்லை…
கனவுக்குள் கனவாய் என்னை நானே கண்டேனே…

பெண் : எனக்கென்ன வேண்டும் என்று…
ஒரு வாா்த்தை கேளு நின்று…
இனி நீயும் நானும் ஒன்று…
என சொல்லும் நாளும் என்று…

பெண் : எனக்கென்ன வேண்டும் என்று…
ஒரு வாா்த்தை கேளு நின்று…
இனி நீயும் நானும் ஒன்று…
என சொல்லும் நாளும் என்று…

—BGM—

பெண் : மலா்களை அள்ளி வந்து…
மகிழ்வுடன் கையில் தந்து…
மனதினை பகிா்ந்திடவே ஆசை கொள்கின்றேன்…

பெண் : தடுப்பது என்ன என்று…
தவிக்குது நெஞ்சம் இன்று…
நதியினில் இலை என நான்…
தோய்ந்து செல்கின்றேன்…

பெண் : அரும்புகள் பூவாகும் அழகிய மாற்றம்…
ஆயிரம் ஆண்டாக பழகிய தோற்றம்…

பெண் : ஒரு வெள்ளி கொலுசு போல…
இந்த மனசு சினுங்கும் கீழ…
அணியாத வைரம் போல…
புது நாணம் மினுங்கும் மேல…

பெண் : ஒரு வெள்ளி கொலுசு போல…
இந்த மனசு சினுங்கும் கீழ…
அணியாத வைரம் போல…
புது நாணம் மினுங்கும் மேல…

பெண் : இதயத்தை ஏதோ ஒன்று…
இழுக்குது கொஞ்சம் இன்று…
இதுவரை இதுபோலே நானும் இல்லையே…

பெண் : கடலலை போலே வந்து…
கரைகளை அள்ளும் ஒன்று…
முழுகிட மனதும் பின் வாங்கவில்லையே…

பெண் : இருப்பது ஒரு மனது…
இதுவரை அது எனது…
என்னைவிட்டு மெதுவாய் அது…
போக கண்டேனே…

பெண் : இது ஒரு கனவு நிலை…
கலைத்திட விரும்பவில்லை…
கனவுக்குள் கனவாய் என்னை நானே கண்டேனே…

பெண் : ஒரு வெள்ளி கொலுசு போல…
இந்த மனசு சினுங்கும் கீழ…
அணியாத வைரம் போல…
புது நாணம் மினுங்கும் மேல…

—BGM—


Notes : Idhayathai Yedho Ondru Song Lyrics in Tamil. This Song from Yennai Arindhaal (2015). Song Lyrics penned by Thamarai. இதயத்தை ஏதோ ஒன்று பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading