உனக்கென்ன வேணும் சொல்லு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைபென்னி டயல் & மஹதிஹாரிஸ் ஜெயராஜ்என்னை அறிந்தால்

Unakkenna Venum Sollu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : உனக்கென்ன வேணும் சொல்லு…
உலகத்தைக் காட்டச் சொல்லு…
புது இடம் புது மேகம்…
தேடிப் போவோமே…

—BGM—

ஆண் : பிடித்ததை வாங்கச் சொல்லு…
வெறுப்பதை நீங்கச் சொல்லு…
புது வெள்ளம் புது ஆறு…
நீந்திப் பார்ப்போமே…

குழு (ஆண்கள்) : இருவரின் பகல் இரவு…
ஒரு வெயில் ஒரு நிலவு…

ஆண் : தெரிந்தது தெரியாதது…
பார்க்கப் போறோமே…

குழு (ஆண்கள்) : உலகென்னும் பரமபதம்…
விழுந்தபின் உயா்வு வரும்…
நினைத்தது நினையாதது…
சோ்க்கப் போறோமே…

ஆண் : ஒரு வெள்ளிக் கொலுசுப் போல…
இந்த பூ சினுங்கும் கீழ…
அணியாத வைரம் போல…
அந்த வானம் மினுங்கும் மேல…

ஆண் : ஒரு வெள்ளிக் கொலுசுப் போல…
இந்த பூமி சினுங்கும் கீழ…
அணியாத வைரம் போல…
அந்த வானம் மினுங்கும் மேல…

—BGM—

ஆண் : கனவுகள் தேய்ந்ததென்று…
கலங்கிடக் கூடாதென்று…
தினம் தினம் இரவு வந்து…
தூங்கச் சொல்லியதே…

ஆண் : எனக்கென உன்னைத் தந்து…
உனக்கிருக் கண்ணைத் தந்து…
அதன் வழி எனது கனா…
காணச் சொல்லியதே…

ஆண் : நீ அடம் பிடித்தாலும்…
அடங்கிப் போகின்றேன்…
உன் மடி மெத்தை மேல்…
மடங்கிக் கொள்கின்றேன்…

ஆண் : தன தார… னத்தர நம்தம்…
தன தார… னத்தர நம்தம்…
தன தார… னத்தர நம்தம்…
தன தார… னத்தர நம்தம்…

குழு (ஆண்கள்) : உனக்கென்ன வேணும் சொல்லு…
உலகத்தைக் காட்டச் சொல்லு…
புது இடம் புது மேகம்…
தேடிப் போவோமே… ஓ… ஓ…

ஆண் : பிடித்ததை வாங்கச் சொல்லு…
வெறுப்பதை நீங்கச் சொல்லு…
புது வெள்ளம் புது ஆறு…
நீந்திப் பார்ப்போமே…

—BGM—

ஆண் : பருவங்கள் மாறி வர…
வருடங்கள் ஓடி விட…
இழந்த என் இனிமைகளை…
உன்னில் கண்டேனே…

ஆண் : எழுதிடும் உன் விரலில்…
சிரித்திடும் உன் இதழில்…
கடந்த என் கவிதைகளை…
கண்டுக் கொண்டேனே…

ஆண் : துருவங்கள் போல் நீளும்…
இடைவெளி அன்று…
ஓ… ஓ… தோள்களில்…
உன் மூச்சு இழைகிறதின்று…

ஆண் : தன தார… னத்தர நம்தம்…
தன தார… னத்தர நம்தம்…
தன தார… னத்தர நம்தம்…
தன தார… னத்தர நம்தம்…

ஆண் : உனக்கென்ன வேணும் சொல்லு…
உலகத்தைக் காட்டச் சொல்லு…
புது இடம் புது மேகம்…
தேடிப் போவோமே…

குழு (ஆண்கள்) : பிடித்ததை வாங்கச் சொல்லு…
வெறுப்பதை நீங்கச் சொல்லு…
புது வெள்ளம் புது ஆறு…
நீந்திப் பார்ப்போமே…

ஆண் : இருவரின் பகல் இரவு…
ஒரு வெயில் ஒரு நிலவு…
தெரிந்தது தெரியாதது…
பார்க்கப் போறோமே…

ஆண் : உலகென்னும் பரமபதம்…
விழுந்தபின் உயா்வு வரும்…
நினைத்தது நினையாதது…
சோ்க்கப் போறோமே…

குழு (ஆண்கள்) : ஒரு வெள்ளிக் கொலுசுப் போல…
இந்த பூமி சினுங்கும் கீழ…
அணியாத வைரம் போல…
அந்த வானம் மினுங்கும் மேல…

குழு (ஆண்கள்) : ஒரு வெள்ளிக் கொலுசுப் போல…
இந்த பூமி சினுங்கும் கீழ…
அணியாத வைரம் போல…
அந்த வானம் மினுங்கும் மேல…


Notes :  Unakkenna Venum Sollu Song Lyrics in Tamil. This Song from Yennai Arindhaal (2015). Song Lyrics penned by Thamarai. உனக்கென்ன வேணும் சொல்லு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading