High On Love Song Lyrics in Tamil

ஹை ஆன் லவ்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நிரஞ்சன் பாரதிசித் ஸ்ரீராம்யுவன் ஷங்கர் ராஜாபியார் பிரேமா காதல்

High On Love Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹே… பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து சாய்க்கிறாய்…
நீ அருகில் புரியாத மாயம் செய்கிறாய்…

ஆண் : உன்னை போலவே நான் இங்கே…
மயங்கி கிறங்கிதான் போனேனே…
போதையாகதான் ஆனேனே…
தள்ளாடும் ஜீவனே…

ஆண் : ஜன்னல் ஓரமாய் முன்னாலே…
ஹே… மின்னல் போலவே வந்தாயே…
விண்ணை தாண்டி ஒரு சொர்க்கத்தை…
மண்ணில் எங்குமே தந்தாயே…

ஆண் : விழியே நீங்கி நீ விலகாதே…
நொடியும் என் மனம் தாங்காதே…
என்ன நேருமோ தெரியாதே…
என் ஜீவன் ஏங்குதே…

BGM

ஆண் : ஹா… என் உயிரை வதைத்திடும் அழகி நீ…
என் இதயத்தில் அமர்ந்திடும் அரசி நீ…
என் உடலினில் நதியாய் ஓடும் உதிரம் நீயடி…

ஆண் : உன் சிரிப்பினில் கவிதைகள் கலங்குதே…
உன் மொழிகளில் இசைகளும் தோற்குதே…
உன் இரு விழி மின்னல் ஏந்த வானம் ஏங்குதே…

ஆண் : உனக்குள் எந்தன் காதல் காண்கிறேன்…
வெளியில் சொல்ல வார்த்தைகள் தேவையா…
இருந்தும் உன் இதழ்கள் அந்த வார்த்தை சொல்லுமா…

BGM

ஆண் : குருவி போலவே என் உள்ளம்…
தத்தி தாவுதே உன்னாலே…
குழந்தை போலவே என் கால்கள்…
சுத்தி திரியுதே பின்னாலே…

ஆண் : தீயை போலவே என் தேகம்…
பத்தி எரியுதே தன்னாலே…
அருவி போலவேஆனந்தம்…
நில்லாமல் பாயுதே…

ஆண் : ஹே… பெண்ணே என் நெஞ்சில் சாய்ந்து சாய்க்கிறாய்…
நீ அருகில் புரியாத மாயம் செய்கிறாய்…

BGM

ஆண் : பியார் பிரேமா காதல்…
பியார் பிரேமா காதல்…
பியார் பிரேமா காதல்…
பியார் பிரேமா காதல்…

BGM


Notes : High On Love Song Lyrics in Tamil. This Song from Pyaar Prema Kaadhal (2018). Song Lyrics penned by Niranjan Bharathi. ஹை ஆன் லவ் பாடல் வரிகள்.