சர்ப்ரைஸ் மீ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கியுவன் ஷங்கர் ராஜா & பிரியா மாலியுவன் ஷங்கர் ராஜாபியார் பிரேமா காதல்

Surprise Me Song Lyrics in Tamil


BGM

பெண் : கனவு கனவு பூக்களை…
நினைவில் நுகர்ந்து பார்க்கிறேன்…
என் நாவில் நானே என் தேனாகிறேன்…

பெண் : சிறகு சிறகு மேகத்தை…
அணிந்து பறந்து போகிறேன்…
நான் அற்ற நானாக நானாகிறேன்…

BGM

பெண் : ஓஹோ… வீசும் வெள்ளை காற்றில்…
என் சுவாசம் நீங்க பார்க்க…
என் தேக தீயில் ஆடை நெய்து…
பூட்டி வைத்தேனே…

பெண் : அந்த சாயம் போன வானில்…
ஒரு வானவில்லை போலே…
என் வாழ்வில் வண்ணம் சேர்த்த…
உன்னை காதல் கொண்டேனே…

பெண் : என் மார்பிலே…
உன் மூச்சு பாயும் அந்த வேளையில்…
கண்ணின் ஓரம் நீர் துளி வீழ கண்டேனே…

ஆண் : வீசும் வெள்ளை காற்றில்…
என் சுவாசம் நீங்க பார்க்க…
என் தேக தீயில் ஆடை நெய்து…
பூட்டி வைத்தேனே…

ஆண் : அந்த சாயம் போன வானில்…
ஒரு வானவில்லை போல…
என் வாழ்வில் வண்ணம் சேர்த்த…
உன்னை காதல் கொண்டேனே…

BGM

ஆண் : பனி மலைகளில் அமைதியை போலே…
நீ வாழ்ந்தாய் நான் வரும் வரையிலே…
புயலென நான் தாக்கினேன்…
ஏதேதோ மின்னல்கள் வீசினேன்…
ஓயாமல் ஜோவென்று பேசினேன்…

ஆண் : மரக்கிளைகளில் வழிந்திடும் மழை துளி…
தரை விழும் முன்னே உறைவதை போல…
நீ உதிர்க்கும் வார்த்தை ஒவ்வொன்றும்…
உறைந்து போக கண்டேனே…

பெண் : இதை காதல் என்ற சின்ன சொல்லில்…
பூட்டி வைக்காதே…

BGM

ஆண் : வீசும் வெள்ளை காற்றில்…
என் சுவாசம் நீங்க பார்க்க…
என் தேக தீயில் ஆடை நெய்து…
பூட்டி வைத்தேனே…

ஆண் : அந்த சாயம் போன வானில்…
ஒரு வானவில்லை போலே…
என் வாழ்வில் வண்ணம் சேர்த்த…
உன்னை காதல் கொண்டேனே…

ஆண் : என் மார்பிலே…
உன் மூச்சு பாயும் அந்த வேளையில்…
கண்ணின் ஓரம் நீர் துளி வீழ கண்டேனே…

பெண் : பியார் பிரேமா காதல்…
பியார் பிரேமா காதல்…
பியார் பிரேமா காதல்…
பியார் பிரேமா காதல்…


Notes : Surprise Me Song Lyrics in Tamil. This Song from Pyaar Prema Kaadhal (2018). Song Lyrics penned by Madhan Karky. சர்ப்ரைஸ் மீ பாடல் வரிகள்.


Scroll to Top