யாரை நம்பி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன்எம்.எஸ்.விஸ்வநாதன்எங்க ஊர் ராஜா

Yaarai Nambi Song Lyrics in Tamil


ஆண் : யாரை நம்பி நான் பொறந்தேன்…
போங்கடா போங்க…
என் காலம் வெல்லும் வென்ற பின்னே…
வாங்கடா வாங்க…

—BGM—

ஆண் : யாரை நம்பி நான் பொறந்தேன்…
போங்கடா போங்க…
என் காலம் வெல்லும் வென்ற பின்னே…
வாங்கடா வாங்க…

—BGM—

ஆண் : குளத்திலே தண்ணி இல்லே…
கொக்குமில்லே மீனுமில்லே…
குளத்திலே தண்ணி இல்லே…
கொக்குமில்லே மீனுமில்லே…
பெட்டியிலே பணமில்லே…
பெத்த புள்ளே சொந்தமில்லே…

ஆண் : யாரை நம்பி நான் பொறந்தேன்…
போங்கடா போங்க…
என் காலம் வெல்லும் வென்ற பின்னே…
வாங்கடா வாங்க…

—BGM—

ஆண் : தென்னைய பெத்தா இளநீரு…
பிள்ளைய பெத்தா கண்ணீரு…
தென்னைய பெத்தா இளநீரு…
பிள்ளைய பெத்தா கண்ணீரு…

ஆண் : பெத்தவன் மனமே பித்தம்மா…
பிள்ளை மனமே கல்லம்மா…
பானையிலே சோறிருந்தா…
பூனைகளும் சொந்தமடா…
சோதனையை பங்கு வச்சா…
சொந்தமில்லே பந்தமில்லே…

ஆண் : யாரை நம்பி நான் பொறந்தேன்…
போங்கடா போங்க…
என் காலம் வெல்லும் வென்ற பின்னே…
வாங்கடா வாங்க…

—BGM—

ஆண் : நெஞ்சமிருக்கு துணிவாக…
நேரமிருக்கு தெளிவாக…
நெஞ்சமிருக்கு துணிவாக…
நேரமிருக்கு தெளிவாக…
நினைத்தால் முடிப்பேன் தனியாக…
நீ யார் நான் யார் போடா போ…

ஆண் : ஆடியிலே காத்தடிச்சா…
ஐப்பசியில் மழை வரும்…
தேடி வரும் காலம் வந்தா…
செல்வமெல்லாம் ஓடி வரும்…

ஆண் : யாரை நம்பி நான் பொறந்தேன்…
போங்கடா போங்க…
என் காலம் வெல்லும் வென்ற பின்னே…
வாங்கடா வாங்க…
என் காலம் வெல்லும் வென்ற பின்னே…
வாங்கடா வாங்க…
வாங்கடா வாங்க வாங்கடா வாங்க…


Notes : Yaarai Nambi Song Lyrics in Tamil. This Song from Enga Oor Raja (1968). Song Lyrics penned by Kannadasan. யாரை நம்பி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading