| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| தாமரை | பத்மலதா & அனுராக் குல்கர்னி | ஜிப்ரான் | மகளிர் மட்டும் (2017) |
Ghandhari Song Lyrics in Tamil
—BGM—
பெண் : காந்தாரி யாரோ கண் பாராத தாரோ…
சூதாடும்போது வன் சூழுரைத்த தாரோ…
சீதைகள் யாரோ சிறை மீளாத தாரோ…
போராடும்போது தீ மூட்டிச் சென்ற தாரோ…
பெண் : சிறு புள்ளி வைக்கின்றாய்…
பெரும் கோலம் படைக்கின்றாய்…
அழகே நீயும் யாரோ…
கடவுளின் துகள் தானோ…
பெண் : கண்ணே என் காதம்பாி…
கண் மூடி தூங்கும் கிளி…
காலங்கள் ஓடும் இனி…
வாகை சூட ஓடி வா வா…
பெண் : எங்கெங்கும் கொல்லும் கைகள்…
கோளாறு செய்யும் பொய்கள்…
காட்டாறாய் மாறி நீயும்…
காடு மேடு தாண்டி வா வா…
பெண் : காந்தாரி யாரோ கண் பாராத தாரோ…
சூதாடும்போது வன் சூழுரைத்த தாரோ…
யாரோ…
—BGM—
பெண் : கருவிலே தொடங்குது உன் கலகமே…
கல்லிப்பால் கடப்பதை கலை…
படிக்கவும் பழகவும் பல தடை…
அதிலுமொர் நெருஞ்சிதான் உடை…
பெண் : காதல் வந்தால் போதும்…
அதற்கும் உடனே பெரும் திரை விழும்…
காதல் கொள்ளும் நெஞ்சம்…
ஒருவன் நினைவில் சதா வதைபடும்…
பெண் : கல்லையும் முள்ளையும் கண்டாலும்…
கால்களில் காயங்கள் வந்தாலும்…
தாண்டி தாண்டி வந்தோமே…
தாமரையாகி நின்றோமே…
பெண் : கண்ணே என் காதம்பாி…
கண் மூடி தூங்கும் கிளி…
காலங்கள் ஓடும் இனி…
வாகை சூட ஓடி வா வா…
பெண் : எங்கெங்கும் கொல்லும் கைகள்…
கோளாறு செய்யும் பொய்கள்…
காட்டாறாய் மாறி நீயும்…
காடு மேடு தாண்டி வா வா…
—BGM—
பெண் : மனைவியாய் பெயர்தரும் திருமணம்…
தன் பெயர் தொலைத்திடும் தினம்…
மழலையை ஏந்திய மறுகனம்…
தாய்யென தலையிலே கனம்…
பெண் : ஓடி ஓடி ஓடி அலுத்து திரும்பும் நொடி…
பெரும் இடி…
சாய்ந்து சாய்ந்து நின்று முதுகில்…
எலும்பே இல்லா விழும் கொடி…
பெண் : அணைகள் இல்லா அம்பாாி…
அந்தரம் ஆடிடும் பெண்துாாி…
சம்பளமில்லா சம்சாரி…
சாசனம் ஆக்கிட வா வா நீ…
—BGM—
{ பெண் : கண்ணே என் காதம்பாி…
கண் மூடி தூங்கும் கிளி…
காலங்கள் ஓடும் இனி…
வாகை சூட ஓடி வா வா…
பெண் : எங்கெங்கும் கொல்லும் கைகள்…
கோளாறு செய்யும் பொய்கள்…
காட்டாறாய் மாறி நீயும்…
காடு மேடு தாண்டி வா வா… } * (2)
பெண் : வா வா வா வா…
வா வா வா வா…
Notes : Ghandhari Song Lyrics in Tamil. This Song from Magalir Mattum (2017). Song Lyrics penned by Thamarai. காந்தாரி பாடல் வரிகள்.
