அணுவிற்குள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
UnknownUnknownUnknownஅம்மன் பாடல்கள்

Anuvirukkul Anuvum Nee Song Lyrics in Tamil


பெண் : அணுவிற்குள் அணுவும் நீ…
அண்டங்கள் அனைத்தும் நீ…
ஆள்கின்ற அரசியும் நீ…

பெண் : கணுவிற்குள் கணுவும் நீ…
கரும்புக்குள் சுவையும் நீ…
கருணைக்கு எல்லையும் நீ…

பெண் : விண்ணும் நீ மண்ணும் நீ…
விகசிக்கும் ஒளியும் நீ…

—BGM—

பெண் : வேதத்தின் மூலமும் நீ…
பண்ணும் நீ பனுவல் நீ…
புலவர்க்கு பொருளும் நீ…
பாருக்கு அன்னையும் நீ…

பெண் : அகிலம் எல்லாம் போற்றும் அகிலாண்ட நாயகியே…
அன்புவடி வான உமையே…
அன்னையே சிவகாமி அம்மையே எனை ஈன்ற…
ஆதிசிவ சக்தி தாயே…

பெண் : கன்றுக்கு பசுவாக குன்றுக்கு ஒளியாக…
என்றைக்கு நீ வருவாய்…
மன்றாடும் பிள்ளைக்கு குன்றாத அன்பதனை…
என்றைக்கு நீ தருவாய்…

—BGM—

பெண் : மண்ணுக்கு மழையாக விண்ணுக்கு நிலவாக…
என்றைக்கு நீ வருவாய்…
கண்ணுக்குள் ஒளியாக நெஞ்சுக்குள் சுடராக…
என்றைக்கு நீ ஒளிர்வாய்…

பெண் : இருளுக்குள் அகப்பட்டு பலவாறு வதைபட்டு…
ஒளிஉன்னைத் தேடி வந்தேன்…
அன்னையே சிவகாமி அம்மையே எனை ஈன்ற…
ஆதிசிவ சக்தி தாயே…

பெண் : விழியுண்டு ஒளியில்லை இருளுண்டு விளக்கில்லை…
வழிகாட்ட நீ வருவாய்…
விதியுண்டு கதியில்லை மருளுண்டு தெளிவில்லை…
மருள்நீக்க நீ வருவாய்…

பெண் : நதியுண்டு நீரில்லை நிலமுண்டு பயிரில்லை…
வளம்சேர்க்க நீ வருவாய்…
சதிசெய்யும் மதியுண்டு மதிசெய்யும் வலியுண்டு…
வலிதீர்க்க நீ வருவாய்…

பெண் : கதியென்று யாருண்டு உனையன்றி எவருண்டு…
காப்பாற்ற நீ வருவாய்…
அன்னையே சிவகாமி அம்மையே எனை ஈன்ற…
ஆதிசிவ சக்தி தாயே…

பெண் : வேரற்ற மரமாகி வீழ்ந்துவிட்டேன் அம்மா…
வேராக நீ வருவாய்…
நோயுற்ற உயிராகி நொந்து விட்டேன் அம்மா…
மருந்தாக நீ வருவாய்…

பெண் : பாதையற்ற வழியில் பயணிக் கின்றேனம்மா…
பாதையாய் நீ வருவாய்…
நாதியற் றிவ்வுலகில் நலிந்து விட்டேனம்மா…
நலம்செய்ய நீ வருவாய்…

பெண் : பேதையென் குரல் கேட்டும் பேசாமலிருப்பதுவும்…
தாயுனக் கழகுதானோ…
அன்னையே சிவகாமி அம்மையே எனை ஈன்ற…
ஆதிசிவ சக்தி தாயே…

பெண் : ஏதொன்றும் அறியாமல் நான்செய்த பிழையாவும்…
பொறுத்தருள வேண்டுமம்மா…
தீதென்று அறியாமல் தீவினையில் வீழ்ந்தஎன்னை…
காத்தருள வேண்டுமம்மா…

பெண் : அகிலங்கள் அனைத்துக்கும் அன்னையே உன்னையே…
சரணென்று பணிந்து விட்டேன்…
ஆகாய கங்கையென பொங்கிவரும் உன்கருணை…
மழைநனைய வந்து விட்டேன்…

பெண் : நொடியு மகலாதஅன்பை யுந்தன்திரு வடிகளிலே…
தந்தெனக்கு அருளிடு வாய்…
அன்னையே சிவகாமி அம்மையே எனை ஈன்ற…
ஆதிசிவ சக்தி தாயே…

—BGM—


Notes : Anuvirukkul Anuvum Nee Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Unknown. அணுவிற்குள் பாடல் வரிகள்.


Scroll to Top